தவறான வாழ்க்கை முறையால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல கடுமையான உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், கொழுப்பைக் கட்டுப்படுத்த நமது சமையலறையில் நிச்சயம் இருக்கும் மிளகை உணவில் சேர்த்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கொலஸ்ட்ரால் காரணமாக இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல கடுமையான உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அதிகரித்து வரும் கொலஸ்ட்ரால் அளவின் காரணமாக சிரமப்படுபவர்கள் அல்லது கெட்ட கொலஸ்ட்ராலை உடலில் இருந்து நீக்க விரும்புபவர்களுக்கு மிளகு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
மிளகை தினமும் சேர்த்துக் கொள்வதல், உடல் எடை குறையும். ஏனெனில் இது கொழுப்பை எரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம். இதைத் தவிர வேறு சில நன்மைகளையும் அள்ளித்தரும் மசாலா நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருமிளகு.
கருப்பு மிளகு உங்கள் மூளைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை உணவில் சேர்த்துக் கொண்டால், மூளை சுறுசுறுப்பாக இருப்பதோடு, மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எனவே இன்றே உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனை இருந்தால், கருமிளகை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிட்டால் உடலில் தண்ணீர் சத்துபற்றாக்குறை ஏற்படாது. சோர்வாகவும் இருக்காது. இதனுடன், சருமத்தில் வறட்சியும் இருக்காது.
மிளகை சூடான பாலில் கலந்து குடிப்பதால் சளியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது தவிர அடிக்கடி சளித் தொல்லை ஏற்பட்டு வந்தால், அதிலிருந்து நிரந்திர விடுதலை கிடைக்க, தினமும் மிளகு சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். ஒரு மிளகு என்ற அளவில் தொடங்கி, இரண்டு மூன்று என தினமும் ஒரு மிளகை அதிகரித்து பதினைந்து நாட்களுக்கு சாப்பிட வேண்டும். பின்னர், ஒரு மிளகு என்ற அளவில் படிப்படியாக, 14, 13 என குறைத்து அடுத்த 15 நாட்களுக்கு ஒரு மிளகு என்ற அளவு வரும் வரை சாப்பிட வேண்டும். இதன் மூலம் சளி பிரச்சனையில் நிவாரணம் கிடைக்கும்.