IMDB-யில் இதுவரை அதிக Rating பெற்ற படங்கள்!

IMDB ரேட்டிங்கில் டாப் 10 திரைப்படத்தில் இந்தியாவை சேர்ந்த மூன்று திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. 

IMDB ரேட்டிங்கில் டாப் 10 திரைப்படத்தில் இந்தியாவை சேர்ந்த மூன்று திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. 

 

1 /10

1) ஜெய் பீம் (Jai Bhim ) :  அண்மையில் ஞானவேல் ராஜா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் OTT-ல் வெளியாகி வெற்றி வாகை சூடிய படம் "ஜெய் பீம்". இந்த படம் மக்கள் மத்தியில் சிறந்ததொரு தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இது IMDB ரேட்டிங்கில் உலக தரத்தில் முதலிடம் பெற்றுள்ளது. 

2 /10

2) தி ஷாஷங் ரிடம்ப்ஷன்(The Shawshank Redemption ) :  1994-ம் ஆண்டு பிராங்க் டாரபாண்ட் இயக்கத்தில் வெளியாகி அனைவரையும் திரும்ப திரும்ப பார்க்க வைத்த the shawshank redemption திரைப்படம் தான் "The Shawshank Redemption". சிறைச்சாலையை சுற்றி நடக்கும் ஒரு சுவையான கதை தான் இந்த படம். இது IMDB  ரேட்டிங்கில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளது . 

3 /10

3) தி காட் பாதர் (The Godfather ) :  1972-ம் ஆண்டு பிரான்சிஸ் போர்ட் கோப்போலோ இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்த படம் "The Godfather". இந்த திரைப்படம் தலைசிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  இது மாஃபியாக்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான திரைப்படமாகும். IMDB  ரேட்டிங்கில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளது 

4 /10

4) சூரரை போற்று (Soorarai Potru ) :  2020-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம் "சூரரை போற்று".  IMDB ரேட்டிங்கில் நான்காமிடத்தை பெற்றுள்ளது.

5 /10

5) சர்தார் உதாம் (Sardhar Udham ) :  சமீபத்தில் அமேசான் பிரைமில் ஷூஜித் சர்க்கார் இயக்கத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்ற படம். தேச பக்தியை கண்முன்னே காட்டி கண்ணீரை வரவைக்கும் படம். இது IMDB  ரேட்டிங்கில் ஐந்தாமிடத்தை பெற்றுள்ளது .

6 /10

6) தி டார்க் நைட் (The Dark Knight ) :  2008-ல் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். இந்த படம் வெளியான அன்றே வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இது IMDB ரேட்டிங்கில் ஆறாமிடத்தை பெற்றுள்ளது . 

7 /10

7) தி காட் பாதர் -2 (The Godfather-2 ) :  1972-ம் ஆண்டு பிரான்சிஸ் போர்ட் கோப்போலோ இயக்கத்தில் வெளியான The Godfather படத்தின் இரண்டாம் பாகமாகும். முதல் பாகத்தின் வரவேற்பை தொடர்ந்து இந்த படம் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.  இது IMDB ரேட்டிங்கில் ஏழாமிடத்தை பெற்றுள்ளது . 

8 /10

8) 12 ஆங்கிரி மென் (12 Angry Men ) :  1957-ல் சிட்னி லூமட் இயக்கத்தில் வெளியான படமாகும். தொலைக்காட்சி தொடராக தயாரிக்கப்பட்டு பின்னர் திரைப்படமாக உருவாகி இன்றளவும் மக்கள் மனதில் நீங்காததொரு இடத்தை பிடித்த படமாகும். இது IMDB  ரேட்டிங்கில் எட்டாமிடத்தை பெற்றுள்ளது . 

9 /10

9) தி லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் ;தி ரிட்டர்ன் ஆப் தி கிங்ஸ் (The lord of the Rings;The Return of the Kings) :  2003-ல் பீட்டர் ஜாக்சன் இயக்கத்தில் வெளியான கற்பனை-நாடகத் திரைப்படமாகும். இது சிறந்த திரைப்படத்திற்கான அகாடமி விருதை சேர்த்து பதினொன்று விருதை வென்றது. இது IMDB ரேட்டிங்கில் ஒன்பதாமிடத்தை பெற்றுள்ளது .

10 /10

10) பல்ப் பிக்ஷன் ( Pulp Fiction ) :  1994-ம் ஆண்டு குவெண்டின் டரண்டினோ இயக்கத்தில் வெளியான ஒரு துப்பறியும் திரைப்படம் ஆகும்.  பல விருதுகளை இப்படம் வென்றுள்ளது.  இது IMDB  ரேட்டிங்கில் பத்தாமிடத்தை பெற்றுள்ளது.