Northeast monsoon: தமிழகத்தை புரட்டிப் போடும் பருவமழை

பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. சாலைகளும், குடியிருப்புகளும் மழைநீரின் வெள்ளத்தால் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

 

மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையினால், பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வானிலை ஆய்வுமையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. மழையால் தத்தளிக்கும் தமிழகத்தின் நிலைமையை உணர்த்தும் புகைப்படங்களின் தொகுப்பு...

ALSO READ | முதல்வரிடம் மழை பாதிப்பு விவரம் கேட்டறிந்தார் ஆளுநர்

1 /6

இதுவொரு பருவமழைக் காலம் என்றாலும், மக்களின் வாழ்க்கை தண்ணீரிலும், கண்ணீரிலும் தத்தளிக்கிறது

2 /6

மழை தேங்கிக் கிடப்பது ஒருபுறம் என்றால், மழைநீரால் வாகனங்களும் வரிசை கட்டி நிற்கின்றன

3 /6

சென்னையில் மூன்று நாட்களுக்கும் மேலாக தொடரும் கனமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை  பாதித்துள்ளது

4 /6

கொட்டும் மழையில் பிறந்தநாள் கொண்டாடி குழந்தையை நெகிழச் செய்த போலீஸ்

5 /6

சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் வியாழக்கிழமை பிற்பகல் 1:15 முதல் மாலை 6 மணி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது

6 /6

தொடரும் கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது