வரலாற்றில் ஜனவரி 19: செவ்வாய் கிரகத்தில் கால்சியம் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது…

சரித்திரத்தின் பொன்னேடுகளில் இன்றைய நாள் செதுக்கியுள்ள முக்கிய பதிவுகள் என்ன? தெரிந்துக் கொள்வோம், புகைப்படங்களின் வாயிலாக… 

புதுடெல்லி: இந்த அண்டத்தில் ஒரு அணு கூட கூடுவதும் இல்லை, குறைவதும் இல்லை, உருமாற்றங்கள் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொல்வது உண்டு. அதேபோல் உலகில் பல்வேறு விஷயங்களும்,சம்பவங்களும் புதிதாக உருவானாலும், அவை இதற்கு முன்னர், எங்கோ, எப்போதோ நடந்திருக்கக்கூடும். வரலாற்றில் ஒரு இம்மியளவு கூட நாம் அறிந்திருக்கிறோமா? இல்லை என்பதற்கு என்றுமே எல்லை இல்லை.... பிரம்மாண்டமான வரலாற்றின் ஒரு சில பதிவுகள், இன்று நிகழ்ந்த நிகழ்வுகளாக பதியப்பட்டுள்ளன. அவை புகைப்படங்களாக...

1 /5

2013: செவ்வாய் கிரகத்தில் கால்சியம் படிமங்கள் இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கண்டறிந்த நாள் இன்று.... 

2 /5

1966: இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமரான நாள் என்று? அது இன்று தான், பிரதமராகவே மண்ணில் இருந்த மறைந்த இரும்புப் பெண்மணிக்கு பிறகு இன்றுவரை எந்த பெண்ணும் இந்திய பிரதமரின் நாற்காலிக்கு மெருகூட்டவில்லை.

3 /5

1915: ஜார்ஜஸ் கிளாட் (Georges Claude) நியான் tubeக்கு காப்புரிமை பெற்ற நாள் ஜனவரி 19…

4 /5

1983: நாஜி போர் குற்றவாளி கிளாஸ் பார்பி (Klaus Barbie) பொலிவியாவில் கைது செய்யப்பட்டார்.

5 /5

Turkish journalist Hrant Dink 2007: துருக்கிய பத்திரிகையாளர் ஹ்ராண்ட் டிங்க் (Hrant Dink) படுகொலை செய்யப்பட்டார்.