How To Get Rid of Headache: வீரியம் மிக்க தலைவலியாக இருந்தாலும், மாத்திரை எடுத்துக் கொள்ள விரும்பாதவரா நீங்கள்? உங்களுக்காக இயற்கையான தலைவலி போக்கும் வைத்தியங்கள்
தலைவலி என்பது பலருக்கும் அடிக்கடி வரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. எந்த வயதை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தலைவலி வரலாம். தலைவலி என்பது லேசானது முதல் மிகவும் கடுமையானது வரை பலவிதத்திலும் வரலாம். தலைவலி என்பது அவ்வப்போது வந்து போனாலும், அது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கிறது.
பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். மன அழுத்தம், அதிகரித்த பதட்டம், சோர்வு, வேலை சுமை, ஒவ்வாமை உட்பட பல காரணங்கள் இருந்தாலும், தலைவலியின் வீரியத்தைப் பொறுத்து அது நமது வாழ்க்கையை பாதிக்கிறது.
தலைவலி தாங்க முடியாததாக இருந்தால், மாத்திரை சாப்பிட்டால் சரியாகி விடுகிறது. ஆனால் வலி நிவாரணிகளுக்கு பக்கவிளைவுகள் இருப்பதால் பலர் மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்ள விரும்புவதில்லை, அப்படியென்றால், இந்த வழிகளை முயற்சி செய்து பாருங்கள்.
தலைவலிக்கு ஒரு பொதுவான காரணம் உடலில் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கலாம். தினமும் குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் நீரிழப்பு அபாயம் குறைகிறது மற்றும் தலைவலி குறைகிறது.
தியானம் மன ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது, தினமும் யோகா பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம், தலைவலியை நீக்கவும் தியானம் உதவும்.
மன ஆரோக்கியத்திற்கு கொட்டைகள் நல்லது என்று கருதப்படுகிறது. வால்நட்ஸ், பாதாம், முந்திரி போன்ற கொட்டைகளை சாப்பிடுவது தலைவலியைக் குறைக்க உதவும், ஏனெனில் தலைவலிக்கு எதிரியான மெக்னீசியம் இருக்கும் இந்த கொட்டை வகைகளை தினசரி உண்ணலாம்
இஞ்சி டீ குடிப்பது தலைவலியை குறைக்க உதவும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது தலைவலியைக் குறைக்கும். பலருக்கு, சாதாரண நாட்களில் கூட இஞ்சி டீ, வலி நிவாரணியாக செயல்படுகிறது.
தலைவலி தாங்கமுடியாமல் போகும் போது ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம். இது மனதை அமைதிப்படுத்த உதவும். எல்லாவற்றையும் விட்டுவிட்டு நன்றாக தூங்க முயற்சி செய்யுங்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.