ஏப்ரல் 1 முதல் ஹோண்டா H'ness CB350 பைக்கின் விலை உயர்கிறது. ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் ஹோண்டா, ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் தனது ஹென்ஸ் சிபி 350 பைக்கின் விலையை உயர்த்தவிருக்கிறது. அண்மையில் செய்யப்பட்ட விலை மாற்றத்தை தொடர்ந்து ஹோண்டாவின் இரு சக்கர வாகனத்தின் விலை 5,500 ரூபாய் வரை அதிகரிக்கும்.
கண்கவர் வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த பைக் பிஎஸ் 6-இணக்கமானது. 348.6 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சினிலிருந்து சக்தியை ஈர்க்கிறது என்பது இதன் சிறப்பம்சம்.
Also Read | #WATCH கமலஹாசனை தோற்கடிக்க, ஸ்மிருதி இரானியின் இந்த ஆட்டம் போதுமா?
தற்போது, ஹோண்டா ஹென்ஸ் சிபி 350 இன் DLX variant விலை ரூ. 1,86,500 ஆகவும், DLX Pro variant sports ரூ. 1,92,500க்கு கிடைக்கிறது (இரண்டு விலைகளும், எக்ஸ்-ஷோரூம் விலை). ஏப்ரல் 1 முதல் விலை உயர்கிறது.
சிறந்த கையாளுதலுக்கு இரட்டை சேனல் ஏபிஎஸ் கிடைக்கிறது பைக் ஓட்டுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஹோண்டா ஹென்ஸ் சிபி 350 முன் மற்றும் பின்புற சக்கரங்களில் disc பிரேக்குகளுடன், இரட்டை சேனல் ஏபிஎஸ் மற்றும் சாலைகளில் மேம்பட்ட கையாளுதலுக்கான இழுவைக் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இது 21 ஹெச்பி, 349 சிசி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. ஹோண்டா ஹென்ஸ் சிபி 350 பிஎஸ் 6-இணக்கமானது. 348.6 சிசி திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின் கொண்டது.
இது 15 லிட்டர் எரிபொருள் டேங்கை கொண்டுள்ளது, 181 கிலோ எடை கொண்டது.
இந்த பைக் புளூடூத் இணைப்பு, முழு எல்.ஈ.டி லைட்டிங் அமைப்பு மற்றும் 19 அங்குல முன் மற்றும் 18 அங்குல பின்புற அலாய் வீல்களைக் கொண்டது
இந்த பைக்கில் லைட்டிங் அனைத்து எல்இடி அமைப்பும் உள்ளது. ஹோண்டா ஹென்ஸ் சிபி 350 half-duplex cradle frame கொண்டு வடிவமைக்கப்பட்டது.