ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காலை மற்றும் இரவு என வேளை பல் துலக்குவது வாய் ஆரோக்கியத்திற்கு நல்லது.
டூத் பிரஸ் பற்களில் இருக்கும் அழுக்குகளை அகற்ற உதவுகிறது. பிரஷ்களில் தேய்ந்த முட்கள் இருந்தால், பற்களை சரியாக சுத்தம் செய்ய முடியாது. இதன் காரணமாக பல் சிதைவு, ஈறு நோய் ஏற்படலாம்.
இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும் என்று பல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு டூத் பிரஷை இந்த காலத்திற்கு மேல் பயன்படுத்துவது பயனற்றது.
புதிய டூத் பிரஸ் பற்களில் இருக்கும் அழுக்குகளை எளிதாக அகற்றுகிறது. இது வாயை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் குறைக்கப்படுகின்றன.
உங்கள் காலெண்டரில் நீங்கள் எப்போது டூத் பிரஸ் வாங்குனீர்கள் என்பதை குறித்து வைத்து கொள்ளுங்கள். இதன் மூலம் சரியான நேரத்தில் அதனை மாற்ற முடியும்.
ஒரே நேரத்தில் 2,3 டூத் பிரஸ்களை வாங்கி வைத்து கொண்டால், அவ்வப்போது மாற்றுவதற்கு எளிதாக இருக்கும். இந்த தகவலைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் நல்ல வாய் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.