குழந்தைகளின் எழுதும் பழக்கத்தைப் பெற்றோர்கள் இனி இப்படி சொல்லிக்கொடுங்க..ஏபிசிடி பதில் இது சூப்பர் யோசனை!

குழந்தைகளிடம் பெற்றோர்கள் பெரும்பாலானோர் எடுத்த வேகத்தில் படிக்க, எழுதச் சொல்லிக்கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதில் படிப்பின் மீது ஒரு வெறுப்பு ஏற்படலாம் அல்லது பிடிக்காமல் போகலாம். எனவே ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளுடன் அன்பாகப் பழக வேண்டும். 

 

குழந்தைகள் எப்போதும் படிப்பு மற்றும் எழுதுதல் திறனில் திறமையாகச் செயல்பட பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமான ஒன்றாக அமைகிறது. மேலும் குழந்தைகளுக்கும் அவர்களின் படிப்பு மீது ஆர்வம் அதிகரிக்கச் செய்யும். இதனால் பிள்ளைகள் நல்ல மனநிலையோடு படிக்க விரும்புகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எடுத்த வேகத்தில் ஏபிசிடி அல்லது அ ஆ இ போன்றவற்றை முதலில் கற்பிப்பதைவிடக் கீழேக் கொடுக்கப்பட்ட முறைப்படி குழந்தைகளிடம் கற்றுக்கொடுங்கள்.

 

1 /8

கிறுக்கல்: ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த ஒன்று பென்சில் மற்றும் பென் வைத்து சுவரில் அல்லது சிலேட்டில் கிறுக்க விரும்புவர். குழந்தைகள் வழியே பெற்றோர்கள் செயல்பட வேண்டும். முதலில் பென்சில் அல்லது சாக்பீஸ் கொடுத்து அவர்களின் விருப்பத்திற்கேற்ப கிறுக்க விடுங்கள்.

2 /8

காகிதம் கிறுக்கல்: பெற்றோர்கள் அன்பான நேரத்தைக் குழந்தைகளுடன் இதுபோன்று செயல்கள் செய்து நேரத்தைக் கல்வி அறிவாகச் செலவிடுங்கள். குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஒரு காகித தாளில் ஏதாவது ஒரு வடிவம் வரைந்து அதற்குள் கிறுக்க கற்றுக் கொடுங்கள்.

3 /8

கோடு வரைதல்: நோட் புத்தகத்தில் குழந்தைகளிடம் பெற்றோர்கள் நேர்கோடு வரைந்து கொடுக்க வேண்டும். அதன்மேல் குழந்தைகள் வரையக் கற்றுக்கொடுக்க வேண்டும். 

4 /8

W,C,R எழுத்து: இந்த W,C,R எழுத்துக்களில் பெற்றோர்கள் ஒரு பொம்மை வடிவ ஓவியம் வரைந்து அதன்மேல் குழந்தைகள் வரையக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

5 /8

மேல் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகள் அனைத்தும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் தினமும் நேரம் செலவிட்டுக் கற்றுக்கொடுக்க வேண்டும். 

6 /8

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இதுபோன்று பயிற்சி அளிப்பதால் அவர்களுக்கு எழுத்துத்திறன் அதிகரிக்கும். மேலும் அவர்களின் ஆர்வம் பல மடங்கும் கூடும் எனச் சொல்லப்படுகிறது. 

7 /8

மேல் கொடுக்கப்பட்ட பயிற்சிகள் அனைத்தும் குழந்தைகள் முழுமையாக கற்றபின் ஒரு நோட்டில் அவர்களுக்கு எழுத்துக்களைப் புள்ளி வைத்துக் கொடுக்க வேண்டும். அதன் மேல் அவர்கள் எழுதிப் பழக வேண்டும்.   

8 /8

குழந்தைகளுக்குத் தேவையான ஒன்று அன்பு, பெற்றோர்கள் உங்களால் முடிந்த அளவிற்கு அன்பு நிறைந்த சொற்களை அவர்களிடம் கொடுக்க வேண்டும். அன்பு ஒன்றே அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் கருவி என்பது பிள்ளைகள் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும் எனக் கூறப்படுகிறது.