வானிலை தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி? நீங்களும் நிபுணராகலாம்..!

வானிலை தகவல்களை எப்படி கொடுக்கிறார்கள்? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

 

1 /8

மழை, வெயில், புயல் குறித்த வானிலை தகவல்களை கொடுக்கும் வெப்சைட் மற்றும் செயலிகளை கொண்டு, முன்கூட்டியே உங்கள் பகுதியின் வானிலை தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.   

2 /8

’சட்டென்று மாறுது வானிலை’ என பாடலாக கேட்டது இப்போது நிஜத்தில் நடத்து கொண்டிருக்கிறது. திடீர் மழை, புயல் வெள்ளம், அதி கனமழை என வரலாறு காணாத நிகழ்வுகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  

3 /8

மழை மற்றும் கோடை பருவங்களும் முன்பை விட மாறிவிட்டன. கால நிலை மாற்றத்தால் இத்தகைய பருவ மாற்றங்களை மக்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிக வெப்பம், அதீத கனமழை என இரண்டும் இந்த கால நிலை மாற்றத்தால் உருவாகிவிட்டது. இதன் இரண்டிலும் இருந்த சமச்சீர் தன்மை மாறிவிட்டது.  

4 /8

இத்தகைய நிலை மனித வாழ்க்கை, உணவு என அனைத்திலும் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. இதுகுறித்து காலநிலை வல்லுநர்கள் மற்றும் உலக நாடுகள் இணைந்து முயற்சி எடுத்தாலும் அதனால் உடனடி பலன்  என்பது கிடைக்கவில்லை. இது வரும் காலத்தில் இன்னும் அதிகரித்து பல்வேறு பிரச்சனைகள் வரும் என்பதை வல்லுநர்கள் கடும் எச்சரிக்கையாக கொடுத்திருக்கிறார்கள்.  

5 /8

இது ஒருபுறம் இருக்க காலநிலை வல்லுநர்களைக் கடந்து தனி நபர்கள்கூட இப்போது அன்றாட வானிலை தகவல்களை பகிர்ந்து கொள்ள தொடங்கியிருக்கிறார்கள்.   

6 /8

இதில் சாதக பாதகங்களைக் கடந்து ஒரு தனிநபர் எப்படி வானிலை தகவல்களை பெற முடிகிறது என்ற கேள்வி இருக்கிறது. அதனை சாத்தியமாகி இருப்பது தான் windy. com,  MAUSAM வெப்சைட், செயலிகள் ஆகும்.  

7 /8

இந்த செயலிகள் மற்றும் வெப்சைட்கள் மூலம் வானிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இவை அனைத்து கணிப்புகள் மட்டுமே.   

8 /8

நிபுணர்களாக இருந்தால் மழை, வெயில், வெப்பத்தின் அளவு, வறட்சியின் அளவு, மழையின் அளவு, மழை மற்றும் புயல் எச்சரிக்கை ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். அல்லது இந்த வானிலை தகவல்கள் தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால் யார் ஒருவரும் வானிலை தகவல்கள் குறித்த தகவல்களை சொல்ல முடியும்.   

Next Gallery