பிறர் உங்களை பற்றி கிசுகிசு பேசினால் என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க!

Gossip At Workplace : பலர், பிறரை பற்றி கிசுகிசு பேசுவதையே வேலையாக வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருப்பர். சிலர், வேலையிலேயே கிசுகிசு பேசிக்கொண்டிருப்பர். இதை, எப்படி கையாள வேண்டும் தெரியுமா? 

Gossip At Workplace : நாம் அனைவருமே, சமூகத்தை சார்ந்த மிருகங்கள்தான். ஒரு விஷயத்திற்காக முடிவு ஒன்றை எடுப்பதற்கு முன்பு “இவங்க என்ன சொல்லுவாங்க..அவங்க என்ன சொல்லுவாங்க..” என்று 400 முறை யோசிப்போம். நாம் நினைத்தைவிட அதிகமானோர், நம்மை பற்றி நம் மூளைக்கே எட்டாத விஷயங்களை எல்லாம் பேசுவர். இப்படி, நம்மை பற்றி நம் காதுபடவே பலர் பேசும் கிசுகிசுக்களையும், புரணி பேசுவதையும் பல சமயங்களில் நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆனால், உண்மையில் இது மனிதராக பிறந்த அனைவருக்கும் நிகழும். இதை எப்படி கையாள வேண்டும் என்று கற்றுக்கொண்டால் பின்னர் உங்களை எந்த அந்நிய சக்தியாளும் அழிக்க முடியாது. அதற்கான ஈசியான டிப்ஸ்களை இங்கு பார்ப்போம் 

1 /8

உங்களை பற்றி யாரேனும் பின்னாடி பேசினால், அது உங்களை பற்றி இல்லை என்று நினைத்துக்கொண்டு உங்களால் முடிந்த வரை அதை கண்டுகொள்ளாமல் வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களை பெரிதளவில் பாதிக்காமல் இருக்கும் வரை அது பற்றி நீங்களும் கண்டுகொள்ள வேண்டாம். 

2 /8

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையும், அலுவலக வாழ்க்கையும் வெவ்வேறு என்பதை நினைவில் கொள்ளுங்கள். தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் விஷயங்களை அலுவலகத்தில் அனைவரிடமும் பகிர்வதை தவிர்த்து விடுங்கள். இது போன்ற தகவல்கள் அவர்களுக்கு தெரிந்தால்தான், கிசுகிசுக்கள் பரவும். 

3 /8

“உங்களை பற்றி இப்படியொரு கிசுகிசு பரவுகிறது தெரியுமா?” என்று யாரேனும் வந்து உங்களிடம் கூறினால், “அப்படியா? இது புதுசா இருக்கே..” என்று சொல்லி சிரித்து விடுங்கள். அதைவிட்டுவிட்டு, தேவையற்று அதற்காக கோபம் கொண்டால் பின்னர் அது ஒரு கிசுகிசுவாக பரவும். 

4 /8

உங்களை பற்றி பரவும் தகவல், உங்கள் மீது இருக்கும் பர்சனல் அட்டாக்காக இருக்கிறதா? என்பதை பாருங்கள். அதே போல, உங்கள் பெயரை கூறாமல் ஆனால் உங்களுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசுகிறார்கள் என்றால், அது உங்களை பற்றிதான் என்று நீங்களே நினைத்து கொள்ளாதீர்கள். ரியாக்ட் செய்வதற்கு முன்னர் முதலில் அது யார் குறித்து என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

5 /8

உங்களை பற்றிய கிசுகிசு கைமீறி போகும் சமயங்களில் அதை ஆவணப்படுத்த ஆரம்பியுங்கள். உதாரணத்திற்கு சாட்டிங் ஸ்க்ரீன் ஷாட், ஏதேனும் கடிதம் ஆகியவை. 

6 /8

உங்களை பற்றி கிசுகிசு பரப்புவோர், வேண்டுமென்றே அதை செய்தால் அவரிடம் நேராகவே பேசிவிடுங்கள். இது, தவறான புரிதல்களை கூட சரிசெய்ய உதவும். 

7 /8

உங்கள் நிறுவனத்தில் வதந்தி அல்லது கிசுகிசுக்கள் பேசுவதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று பாருங்கள். 

8 /8

உங்களை பற்றிய வதந்திகள் பரவாமல் இருக்க, நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள்? என்ன பேசுகிறீர்கள்? என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.