எலுமிச்சம் பழத்தை நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் வைத்திருப்பது எப்படி?

பொதுவாக கடைகளில் வாங்கப்படும் எலுமிச்சை பழங்கள் சிறிது நாட்களில் கெட்டுவிடுகின்றன. இந்நிலையில் நீண்ட நாட்கள் எலுமிச்சை பழத்தை எப்படி சேமிப்பது என்று பார்ப்போம்.

1 /7

உடல் சூட்டை தணிக்க எலுமிச்சை பழம் உதவுகிறது. எனவே வெயில் காலத்தில் பலரது வீடுகளிலும் எலுமிச்சை பழம் வாங்கி வைப்பது வழக்கம்.

2 /7

எலிமிச்சையில் அமிலத்தன்மை அதிகம் இருப்பதால், அவற்றை சரியான வெப்பநிலையில் சேமித்து வைப்பது மிகவும் அவசியம். இல்லையென்றால் எலுமிச்சை விரைவில் கெட்டுவிடும்.

3 /7

நீண்ட நாட்கள் எலுமிச்சை பழம் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றை வாங்கும் போதே சிறிது காயாக பார்த்து வாங்குங்கள். பழுத்த பழங்கள் சீக்கிரம் கெட்டுவிடும்.

4 /7

எலுமிச்சைகளை நீண்ட நாட்கள் சேமிக்க பிளாஸ்டிக் கவர்களில் நன்கு கட்டி, அவற்றை காற்று புகாத டப்பாவில் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

5 /7

எலுமிச்சம்பழத்தை கெட்டுப்போகாமல் சேமித்து வைக்க அதில் சிறிது எண்ணெய் தடவி, நல்ல டப்பாவில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

6 /7

எலுமிச்சைகளை நீண்ட சேமிக்க ஜிப்-லாக் பைகளை பயன்படுத்தலாம். எலுமிச்சம்பழத்தை அதில் வைத்திருப்பதன் மூலம் கெட்டு போகாமல் இருக்கும்.  

7 /7

அலுமினியத் தாளில் எலுமிச்சைப் பழங்களைச் சுற்றி வைத்தால் அதில் இருக்கும் ஈரப்பதம் வெளியில் செல்வது தடுக்கப்படும். இதன் மூலம் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.