+2, டிகிரி முடித்தவர்களுக்கு ரூ. 95,000 உதவித் தொகை வழங்கும் தமிழ்நாடு அரசு - பெறுவது எப்படி?

Tamil Nadu Government | +2, டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலைய பணிக்கு தமிழ்நாடு அரசு உதவித் தொகையுடன் கூடிய இலவச பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tamil Nadu Government Free Training | பன்னிரெண்டாம் வகுப்பு, டிகிரி முடித்த மாணவ, மாணவிகள் விமான நிலையத்தில் பணியாற்றுவதற்கு தேவையான பயிற்சிகளை 95,000 ரூபாய் உதவித் தொகை கொடுத்து தமிழ்நாடு அரசு வழங்குகிறது. 

1 /8

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANDA) நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

2 /8

தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. 

3 /8

அதன்அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் (IATA-NDA) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படைபடிப்பு (Air Cargo Introductory+ DGR) சரக்கு ஏற்றுமதி மற்றும்இறக்குமதி அடிப்படை படிப்பு (Passenger Ground Services + Reservation Ticketing) சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு (Foundation in Travel and Tourism) போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

4 /8

இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 18 முதல் 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான காலஅளவு ஆறுமாதமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையான ரூ.95,000/-த்தை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். 

5 /8

இப்பயிற்சியினை வெற்றிதரமாக முடிக்கும் பட்சத்தில் IATA-International Air Transport Association-Canda மூலம் அங்கீரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தனியார் விமானநிறுவனங்களிலும் (Indigo, Airlines, Spice Jet, Go First, Air India), சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம். 

6 /8

ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.20,000/- முதல் ரூ.22,000/- வரைபெறுவதற்கு வழிவகை செய்யப்படும், பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ரூ.50,000/- முதல் ரூ.70,000/- ஊதிய உயர்வு பெறலாம்.

7 /8

இத்திட்டத்தின் கீழ் 55 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு முதற்கட்டமாக 46 நபர்கள் முன்னனி விமான நிறுவனங்கள் மற்றும் சேவை மையங்களான Indigo, Air India, Menzies, Bird Aviation, Hyundai, iGo Tours, Wings vacation, Zenith Tours, Alhind Tours & Money Exchange போன்றவைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

8 /8

தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த பயிற்சியின் சிறப்புகள் : பன்னிரெண்டாம் வகுப்பு, டிகிரி தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ, மாணவிகளாக இருக்க வேண்டும். 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். 6 மாதம் விடுதியில் தங்கி படிக்க தேவையான அனைத்து வசதிகளும் இலவசம். பயிற்சி ஊக்கத்தொகையாக ரூ.95,000 தாட்கோ வழங்கும். இப்படியான அருமையான வாய்ப்பை யாரும் தவற விட்டுவிடாதீர்கள்.