பெற்றோர்கள் சொல்லாமலேயே குழந்தைகள் கற்றுக்கொள்ளும் 7 விஷயங்கள்!!

Behaviors Kids Learn From Their Parents : குழந்தைகள், சில விஷயங்களை தங்களது பெற்றோர் கற்பிக்காமலேயே கற்றுக்கொள்வர். அவை என்னென்ன விஷயங்கள் தெரியுமா? 

Behaviors Kids Learn From Their Parents : குழந்தைகள், களிமண் போன்றவர்கள் என்று பலர் சொல்லி கேள்வி பட்டிருப்போம். அவர்களை, நாம் எப்படி செதுக்குகிறோமோ அது போலவே அவர்கள் வளர்வார்கள். ஆனால் பல சமயங்களில் நாம் சிலவற்றை கற்றுத்தராமலேயே அவர்கள் கற்றுக்கொள்வர். அப்படிப்பட்ட விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

1 /8

குழந்தைகள், கிடைக்கும் திரவங்களை ஈர்த்துக்கொள்ளும் பஞ்சு போன்றவர்கள். இவர்களுக்கு கற்றுக்கொடுத்தால் கூட சில விஷயங்கள் புரியாது. ஆனால், கற்றுக்கொடுக்காமலேயே பல விஷயங்களை கற்றுக்கொள்வர். அந்த படிப்பினைகள், அவர்களை சுற்றி இருப்பவர்களை பார்த்து அல்லது பெற்றோர் தினமும் செய்வதை பார்ப்பதால் ஏற்படும். அவர்கள், அப்படி கற்றுக்கொள்ளும் விஷயங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா? 

2 /8

உணர்வுகளுக்கு பதிலளிப்பது: குழந்தைகள், பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் விஷயங்களுள் ஒன்று, பிறரது உணர்ச்சிகளுக்கு பதில் அளிக்கும் விதம்தான். அதே போல, கோபமாக, மகிழ்ச்சியாக, சோகமாக இருக்கும் போது பெற்றோர் அதற்கு எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதையும் குழந்தைகள் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்வர். 

3 /8

சமூகத்துடனான உரையாடல்: பெற்றோர், பலர் கூடும் இடங்களில் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதையும் குழந்தைகள் கற்றுக்கொள்வர். பெற்றோர் பிறரிடம் அன்பாக, கணிவாக நடந்து கொண்டால், குழந்தைகளும் பிறரிடம் அப்படியே நடந்து கொள்வர். 

4 /8

கற்றல் முறை: ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும் போது, அந்த அணுகுமுறை பெற்றோர்களுக்கு எப்படி இருக்கிறதோ அந்த அணுகுமுறையைதான் குழந்தைகளும் பின்பற்றுவர். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும் போது எப்படி கவனம் கொடுக்கிறீர்கள், படிக்கிறீர்கள், உங்களது புரிதல் என அனைத்தையும் குழந்தைகள் ஆழ்ந்து கவனிப்பர். அதுபோலத்தான் அவர்களும் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும் போது ரியாக்ட் செய்வர். 

5 /8

வேலை பார்க்கும் முறை: பெற்றோர், அவர்களின் வேலைகளை எப்படி செய்கின்றனர் என்பதை பார்த்தும் குழந்தைகள் கற்றுக்கொள்வர். உதாரணத்திற்கு, பெற்றோர் தங்களுக்கு பிடிக்காத வேலையை செய்யும் போது எப்போதும் கோபமாக இருக்கிறார்கள் என்றால், குழந்தைகளும் அவர்களுக்கு பிடிக்காத வேலையை செய்யும் போது அப்படித்தான் இருப்பர். 

6 /8

ஆரோக்கிய வாழ்க்கை முறை: பல பெற்றோர் உடற்பயிற்சி செய்வதையும், ஹெல்தியாக சாப்பிடுவதையும் வழக்கமாக கொண்டிருப்பர். சிலர், அது போன்ற நடைமுறைகள் இல்லாமல் இருப்பர். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அதே போலத்தான் குழந்தைகளும் இருப்பர்.

7 /8

நிதி மேலாண்மை: பணத்தை எப்படி பெற்றோர்கள் கையாள்கின்றனரோ, அதை குழந்தைகள் பார்த்தே உள்வாங்கி கொள்வர். உதாரணத்திற்கு, பெற்றோர்கள் தேவையற்ற செலவுகள் செய்கின்றனர் என்றால், பிள்ளைகளும் அப்படியே வளர வாய்ப்பிருக்கிறது. 

8 /8

பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன்: பெற்றோர்கள், தங்கள் வாழ்வில் ஒரு சிக்கல் வரும் போது எப்படி அதை கையாள்கின்றனர் என்பது குழந்தைகளின் மனதில் ஆழ பதிந்து விடும். சண்டை வரும் போது கத்துகிறார்களா? அமைதியாக எந்த சூழலையும் கையாள்கின்றனரா? என்பது அவர்களுக்கு தொடர்ச்சியாக காண்கையில் தெரிந்து விடும். அது போலத்தான் அவர்களும் தங்களுக்கு வரும் சிக்கல்களை கையாள்வர்.