iPhone வாங்க முடியவில்லை என கவலை வேண்டாம்: இந்த Smartphones உங்கள் தேவையை நிறைவு செய்யும்

ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை, சில அற்புதமான அம்சங்களைப் பெறுவதற்கு பெரிய அளவில் பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. எங்கு, எப்படி வாங்க வேண்டும் என்பதை நீங்கள் கண்டறிந்தால் சில லாபகரமான டீல்களை நீங்கள் பெற முடியும். சுமார் ரூ .25,000 செலவில் நீங்கள் பல நல்ல ஸ்மார்ட்போன்களைக் காணலாம். ரூ .25,000 மற்றும் அதற்கும் குறைவான விலைகொண்ட தொலைபேசிகளின் தொகுக்கப்பட்ட பட்டியல் இதோ உங்களுக்காக.

ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை, சில அற்புதமான அம்சங்களைப் பெறுவதற்கு பெரிய அளவில் பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. எங்கு, எப்படி வாங்க வேண்டும் என்பதை நீங்கள் கண்டறிந்தால் சில லாபகரமான டீல்களை நீங்கள் பெற முடியும். சுமார் ரூ .25,000 செலவில் நீங்கள் பல நல்ல ஸ்மார்ட்போன்களைக் காணலாம். ரூ .25,000 மற்றும் அதற்கும் குறைவான விலைகொண்ட தொலைபேசிகளின் தொகுக்கப்பட்ட பட்டியல் இதோ உங்களுக்காக.

1 /5

மோட்டோ ஜி பவர் 60 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் பிரம்மாண்டமான 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், முழு நேர பயன்பாட்டுடன் இதை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சார்ஜ் செய்யத் தேவை இருக்காது. 64 ஜிபி ஸ்டோரேஜ், RAM 4 ஜிபி மற்றும் கேமராக்கள் 16 எம்பி ப்ரைமரி, 8 எம்பி அல்ட்ரா-வைட், 2 எம்பி மேக்ரோ என்ற அம்சங்களுடன் இது வருகிறது. இதன் விலை ரூ .14,000.  

2 /5

6.50-இன்ச் (1080x2400) டிஸ்பிளே மற்றும் ப்ராசசர் சாம்சங் எக்ஸினோஸ் 9611. முன் கேமரா 32 எம்.பி, பின்புற கேமரா 64 எம்.பி + 12 எம்.பி + 5 எம்.பி + 5 எம்.பி. இது 128 ஜிபி ஸ்டோரேஜுடன் 6 ஜிபி RAM-ஐக் கொண்டுள்ளது. பேட்டரி கேபாசிடி 6000 எம்ஏஎச். இது OS மற்றும் Android உடன் இணக்கமானது. இதன் விலை 19,500 ரூபாய் ஆகும்.

3 /5

ரூ .17,500 விலை கொண்ட மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 1,080x2,340 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730 ஜி பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. கேமராவைப் பற்றி பேசினால், மோட்டோரோலா ஒன் ஃப்யூஷனில் 64 மெகாபிக்சல் ப்ரைமரியுடன் f / 1.8 அபர்சர், f/2.2 அபர்சருடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள், f/2.4 அபர்சருடன் 5 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் 2 மெகாபிக்சல் கொண்டது.

4 /5

அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ், ரூ .17,499 என்ற விலையில் வருகிறது. ஸ்மார்ட்போனில் சூப்பர் AMOLED கபாசிடிவ் தொடுதிரை உள்ளது. இது 270 பிபிஐ டென்சிடியுடன் 720 x 1600 பிக்சல்கள் ரெசல்யூஷன் வழங்குகிறது. ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா 48 எம்.பி. (அகலம்) + 8 எம்.பி. (அல்ட்ராவைடு) + 2 எம்.பி. (மேக்ரோ) + 2 எம்.பி (ஆழம்) கொண்டிருக்கிறது. முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்க 13 எம்.பி. (அகலமான) கேமரா உள்ளது.  

5 /5

ஒன்பிளஸ் நோர்ட் ஒரு இடைப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். இதில் சில முதன்மை நிலை அம்சங்கள் உள்ளன. ஒன்ப்ளஸ் நோர்டில் 6.44 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC ஆல் இயக்கப்படுகிறது. எனவே இது 5 ஜி-யால் இயக்கப்பட்டிருக்கிறது. இது மூன்று வகைகளில் அறிவிக்கப்பட்டது: 6 ஜிபி RAM ரேம் 64 ஜிபி ஸ்டோரேஜுடன் - விலை ரூ. 24,999; 8 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜுடன் - விலை ரூ. 27,999; மற்றும் 12 ஜிபி RAM 256 ஜிபி ஸ்டோரேஜுடன் – விலை ரூ. 29,999.