Photo gallery on IPL 2020: KXIP vs DC போட்டியின் 5 முக்கிய தருணங்கள்

துபாயில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) இந்தியன் பிரீமியர் லீக் 2020 இன் இரண்டாவது போட்டியில் வியத்தகு சூப்பர் ஓவர் மோதலுக்குப் பிறகு டெல்லி கேபிடல்ஸ் (DC) கிங்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP) ஐ வீழ்த்தியது.

சூப்பர் ஓவர் என்றாலே ரசிகர்களுக்கு உற்சாகம் தான் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2020 இன் இரண்டாவது போட்டியில் களம் கண்ட   கிங்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (DC) சூப்பர் ஓவரில் விளையாடின.  

சூப்பர் ஓவர் முழு போட்டியின் சிறப்பம்சம் என்று சொன்னாலும், நிச்சயமாக முழுப் போட்டியிலும் பல சுவாரஸ்யமான தருணங்கள் இருந்தன. Stonis எடுத்த துரிதமான 50 ரன்கள்  முதல் ஆர்அஸ்வின் காயமடைந்தது என பல சிறப்பான நினைவுகளை சற்றே அசை போடலாமா? 

1 /5

Kings XI Punjab அணி முதலில் பந்து விச்ச களம் இறங்கியது. முகமது ஷமி டெல்லி அணியின் முதல் ஆட்டக்கார்ர்களை சற்றே ஆட்டம் காண வைத்துவிட்டார்...   டெல்லியின் டாப்-ஆர்டர் நொறுங்கியதால் ஷமி அனைத்து துப்பாக்கிகளையும் எரியச் செய்தார். ஷமி முதலில் டெல்லியின் இளம் வீரர் பிருத்வி ஷாவை அவுட் செய்தார். அதற்கு கிறிஸ் ஜோர்டான் உதவி செய்தார். ஷமி தனது நான்கு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.   மொஹமத் ஷமியின் சிறந்த ஐபிஎல் ஆட்டங்கள்: 3/15 vs DC Dubai 2020 * 3/21 vs MI Mumbai WS 2019 2/17 vs CSK Mohali 2019

2 /5

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷாப் பந்த் ஆகியோர் DC இன்னிங்ஸை உறுதிப்படுத்தினாலும், இது மார்கஸ் ஸ்டோனிஸின் அதிரடி ஆட்டம் Delhi Capitals (DC) அணியை 157/3 என்ற கணக்கில் சுருட்டியது.  ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் Marcus Stoinis, KXIP அணியின் பந்துவீச்சுக்கு எதிராக தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். போட்டியின் இறுதி 3 ஓவர்களில் 53 ரன்களை கொடுத்தார். ஸ்டோனிஸின் red-hot இன்னிங்ஸில், ஏழு பவுண்டரிகளையும் மூன்று பெரிய சிக்ஸர்களும் அடங்கும். இவையே அவரின் அரை சத சாதனைக்கு அடிப்படையாக இருந்தது...   Fastest 50s for DC in IPL (balls): 17 C Morris v GL Delhi 2016 20 V Sehwag v RR Jaipur 2012 20 M STOINIS v KXIP Dubai 2020*

3 /5

போட்டியில் காயம் ஏற்பட்டதால் ரவிச்சந்திரன் அஸ்வின் களத்தில் இருந்து வெளியேறினார். ஆனால், முன்னாள் KXIP கேப்டன் ஒரு ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டு ரன்களை மட்டுமே கொடுத்து நல்லத் தொடக்கத்தைக் கொடுத்தார்.  இருப்பினும், தனது முதல் ஓவரின் இறுதி பந்தில், அஸ்வின் மேக்ஸ்வெல் பந்தை   நிறுத்த முயன்றார், ஆனால் அது அவருடைய கையை மோசமாக பதம் பார்த்தது.  இந்த காயத்தால், அஸ்வினின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு shoulder dislocation ஏற்பட்டது ஆட்டத்தின் முடிவில் உறுதிப்படுத்தப்பட்டது. இது, Delhi Capitals அணிக்கு இழப்பு மட்டும் அல்ல, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் இல்லாததன் சிக்கல் எதிர்வரும் போட்டிகளில் எதிரொலிக்கலாம்.  டெல்லியின் பிரீமியம் ஸ்பின்னராக இருந்த பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு மாற்றாக, அஜிங்க்யா ரஹானே களம் இறங்கினார்.  

4 /5

மாயங்க் அகர்வால் பஞ்சாப் அணிக்கு பலம் என்பதை நிரூபித்தார். அகர்வால் மெதுவாகவே தனது திறமையைக் காட்டத் தொடங்கினார், ஏனெனில் அவரது சக வீரர்கள் சீட்டுக்கட்டு சரிவதைப் போல் ஒருவர் பின் ஒருவராக களத்தை விட்டு வெளியேறினார்கள்.     பதுங்கிப் பாய்ந்து வேகத்தை எடுத்த அவர்,  60 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். KXIP அணியை வெற்றியை நெருங்கச் செய்யும் முயற்சியில் அவர் ஏழு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை அடித்தார்.   ஐ.பி.எல்லில் மாயங்க் அகர்வாலின் அதிகபட்ச ஸ்கோர்கள்:   89 vs DC Dubai 2020 68 vs KXIP Pune 2015 64*vs MI Bengaluru 2012  

5 /5

துபாயில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) இந்தியன் பிரீமியர் லீக்   2020 இன் இரண்டாவது போட்டியில் வியத்தகு சூப்பர் ஓவர் மோதலுக்குப் பிறகு டெல்லி கேபிடல்ஸ் (DC) கிங்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP)ஐ வீழ்த்தியது.   சூப்பர் ஓவரில், Kagiso Rabada தனது பந்துவீச்சு திறனை மீண்டும் வெளிப்படுத்தினார், அவர் ராகுல் மற்றும் Pooranஇன் விக்கெட்டுகளை சுலபமாக எடுத்தார்.   போட்டியை வெல்ல, ஆறு பந்துகளில் மூன்று ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் அவரது விக்கெட்டை வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ் அணி, போட்டியை சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்றது.