முதுமைக்கு குட்பை சொல்ல... கொலாஜனை தூண்டும் ‘சூப்பர்’ உணவுகள்!

Anti-Ageing Foods: முதுமையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள கொலாஜன் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொண்டு, என்றும் இளமையாக இருக்கலாம்.

பொதுவாக, 30 வயதிற்குப் பிறகு, உடல் உறுப்புகளின் செயல்பாட்டின் வேகம் குறையத் தொடங்குகிறது. முதுமையின் தாக்கம் மெதுவாகத் தோன்றத் தொடங்குகிறது. இது மட்டுமின்றி,  முதுமை நெருங்கினால், இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ், இரத்த சோகை, தைராய்டு போன்ற தீவிர நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. 

1 /7

சருமத்தின் தோற்றம்  மற்றும் இளமை ஆகியவற்றை பராமரிக்க உணவு ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. கொலாஜன் நிறைந்த உணவுகள் அல்லது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்பது உங்கள் சருமத்தை இறுக்கமாக்கி சுருக்கங்களை போக்கி இளமையாக வைத்திருக்கும்.  

2 /7

குடைமிளகாயில் காணப்படும் கேப்சைசின் எனப்படும் அழற்சி எதிர்ப்பு கலவை சருமம் முதுமை அடைவதை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் குடை மிளகாயில் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடண்டுகள், அமினோ அமினோ மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. 

3 /7

நமது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ள கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகள் சூப்பர்ஃபுட் வகையை சேர்ந்தவை. இதில் உள்ள குளோரோபில், கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

4 /7

உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவும் அமினோ அமிலங்கள், துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற அத்தியாவசிய தாதுக்களின் சக்திவாய்ந்த ஆதாரமாக மீன் உள்ளது.  மீண் உணவுகள் மூலம் ஆரோக்கியமான இளமையான சருமத்தை பராமரிக்கலாம். பல வகையான பிற மீன்களிலும் சில வகை இறைச்சிகளிலும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பதால், முதுமையை எதிர்த்து போராட உதவும்.   

5 /7

இலவங்கப்பட்டை ஆரோக்கியத்திற்கு பல முக்கிய செயல்பாடுகளை கொண்ட ஒரு மசாலா. இது சரும செல்களை மீளுருவாக்கம் செய்து கொலாஜனை அதிகரிக்க உதவுகிறது, முதுமை எதிர்ப்பு முகவராக செயல்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் நமது சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது.  

6 /7

மஞ்சளில் மிகவும் சக்தி வாய்ந்த கூறு  ஒன்று உள்ளது. இதன் பெயர் குர்குமின். இது கொலாஜனை அதிகரிக்க உதவுகிறது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும், இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது புற்று நோயைத் தடுக்கும்  ஆற்றல் உண்டு. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.