ஒரு மக்களவை சபாநாயகருக்கு இவ்வளவு அதிகாரங்கள் இருக்கிறதா?

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தியா கூட்டணியின் கே சுரேஷை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

1 /6

கடந்த முறை மக்களவை சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா இந்த முறையும் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2 /6

மக்களவையில் யார் பேச வேண்டும், யார் பேச கூடாது போன்ற அதிகாரங்களை சபாநாயகர் வைத்துள்ளார். மேலும் மக்களவையில் ஒழுக்கத்தை உறுதி செய்வது இவரது முக்கிய பணி.

3 /6

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை சபாநாயகர் பாதுகாக்கிறார். எந்தவித சண்டை சச்சரவுகள் இல்லாமல் பார்த்து கொள்கிறார்.

4 /6

மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெறும் போது முட்டுக்கட்டை ஏற்பட்டால், பிரச்சினையைத் தீர்க்க சபாநாயகருக்கு வாக்களிக்க உரிமை உண்டு.

5 /6

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை சபாநாயகர் தான் தீர்மானிக்கிறார். மக்களவையில் ஏதேனும் எம்பி தவறு செய்யும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உரிமை உண்டு.  

6 /6

சில குற்றங்களுக்காக எம்பியை தகுதி நீக்கம் செய்யவும் சபாநாயகருக்கு உரிமை உண்டு. ஒத்திவைப்புத் தீர்மானம், நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்றவற்றிற்கு சபாநாயகர் அனுமதி தேவை. எனவே தான் இந்த பதவிக்கு எப்போதும் போட்டி இருக்கும்.