IPL 2020: காயமடைந்த கிரிக்கெட் வீரர்கள் photo gallery

ஐ.பி.எல் 2020 போட்டிகள் தான் இன்று தலைப்புச் செய்திகளில் இருக்கின்றன. யார் எவ்வளவு ரன் எடுத்தார், வெற்றி பெற்ற அணி எது என பல்வேறு தகவல்களும் காரசாரமாக பேசப்படுகின்றன. ஆனால், போட்டியில் விளையாடவிருந்து ஏதோவொரு காரணத்தால் விளையாட முடியாமல் போனவர்கள் யார்-யார் என்று தெரியுமா? இதோ புகைப்படத் தொகுப்பு...

ஐ.பி.எல் 2020 போட்டிகள் தான் இன்று தலைப்புச் செய்திகளில் இருக்கின்றன. யார் எவ்வளவு ரன் எடுத்தார், வெற்றி பெற்ற அணி எது என பல்வேறு தகவல்களும் காரசாரமாக பேசப்படுகின்றன. ஆனால், போட்டியில் விளையாடவிருந்து ஏதோவொரு காரணத்தால் விளையாட முடியாமல் போனவர்கள் யார்-யார் என்று தெரியுமா? இதோ புகைப்படத் தொகுப்பு...

1 /5

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், பயிற்சி மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்துவிட்டார். ஆனால் செப்டம்பர் 22 அன்று சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான தொடக்கப் போட்டியில் அவரால் பங்கேற்க முடியுமா என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை.   செப்டம்பர் 11 அன்று இங்கிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக ஸ்மித்துக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர்  மூன்று போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் பங்கேற்கவில்லை.

2 /5

தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்த்தினால் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னி ஐபிஎல் 2020 இல்  வெளியேறினார். கே.கே.ஆர் அணியின் இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்றும் கடந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது. கடந்த சீசனில் கே.கே.ஆர் அணிக்காக விளையாடிய ஹாரி, எட்டு ஆட்டங்களில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

3 /5

போட்டியில் காயம் ஏற்பட்டதால் ரவிச்சந்திரன் அஸ்வின் களத்தில் இருந்து வெளியேறினார். ஆனால், முன்னாள் KXIP கேப்டன் ஒரு ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டு ரன்களை மட்டுமே கொடுத்து நல்லத் தொடக்கத்தைக் கொடுத்தார்.   இருப்பினும், தனது முதல் ஓவரின் இறுதி பந்தில், அஸ்வின் மேக்ஸ்வெல் அடித்த பந்தை நிறுத்த முயன்றார், ஆனால் பந்து அவருடைய கையை பதம் பார்த்து விட்டது.     இந்த காயத்தால், அஸ்வினின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு shoulder dislocation ஏற்பட்டது. ஆட்டத்தின் முடிவில் உறுதிப்படுத்தப்பட்டது. இது, Delhi Capitals அணிக்கு இழப்பு. அதோடு, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் இல்லாததன் சிக்கல் எதிர்வரும் போட்டிகளில் எதிரொலிக்கலாம்.  

4 /5

செப்டம்பர் 20 ம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிரான தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக பயிற்சியின்போது டெல்லி  கேப்பிடல்ஸின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா காயமடைந்தார். 32 வயதான வேகப்பந்து வீச்சாளர் கிங்ஸ் லெவன் அணிக்கு எதிரான டெல்லி அணியின் தொடக்க ஆட்டத்தைத் தவறவிட்டார், இந்தப் போட்டியில் சூப்பர் ஓவர் இருந்த நிலையில், போட்டி அனைவருக்கும் த்ரில்லை ஏற்படுத்தியது.

5 /5

இங்கிலாந்தின் தொடக்க பேட்ஸ்மேன் ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் 2020 இலிருந்து வெளியேறினார். அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட இருந்தார்.   ஆனால் அவர் விலகுவதற்கான உண்மையான காரணம், பயிற்சியின் போது அவர் சந்தித்த காயம் என்று கூறப்படுகிறது. எனவே அவர் பாகிஸ்தானுக்கு எதிரான  மூன்று போட்டிகளின் இருபது-20 தொடரில் இருந்து வெளியேறினார்.