கீழே ரயில், மேலே ஷாப்பிங் மால், 498 கோடியில் கட்டப்படும் கோரக்பூர் ரயில் நிலையம் எப்படி இருக்கும்?

Railway Station Redevelopment: கோரக்பூர் ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 7ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். ரயில் நிலையத்தின் தோற்றம் முற்றிலும் நவீனமயமாகிறது.  

கீழே ரயில், மேலே ஷாப்பிங் மால், 498 கோடியில் கட்டப்படும் கோரக்பூர் ரயில் நிலையம் எப்படி இருக்கும்?  இது கட்டமைப்பு வடிவமைப்பு தொடர்பான புகைப்படங்கள்

1 /9

கோரக்பூர் ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணி ஜூலை 7ஆம் தேதி தொடங்குகிறது

2 /9

சுமார் ரூ.498 கோடி செலவில் இந்த ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். 

3 /9

உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கோரக்பூர் ரயில் நிலையம் கட்டப்படுகிறது. இந்த திட்டம் பயணிகளுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

4 /9

ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது என்பதால், அதை நிர்வாகம் செய்வதில் முழு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புதிய ரயில் நிலையம் மூலம், அடுத்த 50 ஆண்டுகளுக்கான பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட மேலாண்மை என்பது புதிய நிலையத்தின் தாரக மந்திரம்.

5 /9

கோரக்பூர் ரயில் நிலையம் 6,300 சதுர மீட்டர் பரப்பளவில் புதிதாக அமைக்கப்படுகிரது. ஒரே நேரத்தில் 3,500 பேர் கூடினாலும் நெரிசல் இல்லாத வகையில் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது  

6 /9

புதிதாக சீரமைப்படும் கோரக்பூர் ரயில் நிலையத்தில் ஹோட்டல், வணிக வளாகம் மற்றும் மருத்துவமனை வசதிகள் இருக்கும்.

7 /9

இதுவரை கோரக்பூர் ரயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதில் பெரும் சிக்கல் இருந்தது. தற்போது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்தனியாக பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

8 /9

கோரக்பூர் ரயில் நிலையம் அதன் பழைய பாரம்பரியம் மற்றும் சின்னங்களை மறக்காது. 

9 /9

புனரமைக்கப்படும் ரயில் நிலையத்தில், செழுமையான பாரம்பரியமும் முழுமையாக பாதுகாக்கும்படி கட்டமைக்கப்படும்