சரித்திரம் பல பதிவுகளை கொண்டுள்ளது. அது நல்லதாகவும் அல்லதாகவும் இருக்கிறது. இன்று ஜனவரி 16, வரலாற்றின் நினைவுப் பேழையில் இருந்து சில முக்கிய நிகழ்வுகள்...
சரித்திரத்தில் ஜனவரி 16: இந்த நாள் வரலாற்றின் பல முக்கிய சம்பவங்கள் நடைபெற்ற நாள்... இராக் மீது போர் தொடங்கப்பட்ட தினம் இன்று.
1991: கூட்டணிப் படைகள் வளைகுடா போரைத் தொடங்கின. ஈராக்கில் போர் மேகம் சூழ்ந்தது
1945: ஹிட்லர் நிலத்தடி பதுங்கு குழிக்குள் சென்றார்
2001: காங்கோவின் அதிபர் லாரன்ட் கபிலா அவரது மெய்க்காப்பாளரால் படுகொலை செய்யப்பட்ட நாள் ஜனவரி 16
1920: லீக் ஆஃப் நேஷன்ஸ் தனது முதல் சபைக் கூட்டத்தை பிரான்சின் பாரிஸில் நடத்தியது
1492: ஸ்பானிஷ் மொழியின் முதல் இலக்கண புத்தகம் ராணி முதலாம் இசபெல்லாவுக்கு வழங்கப்படுகிறது