இந்த உலகம் மர்மங்கள் நிறைந்தது. பூமியில் மர்மங்களும் சுவாரஸ்யங்களும் நிறைந்த பல இடங்கள் உள்ளன. அவற்றைப்பற்றி மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும். உலகில் 'இறந்தவர்களின் நகரம்' என்று அழைக்கப்படும் ஒரு கிராமம் உள்ளது. அங்கு சென்ற யாரும் இது வரை திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த உலகம் மர்மங்கள் நிறைந்தது. பூமியில் மர்மங்களும் சுவாரஸ்யங்களும் நிறைந்த பல இடங்கள் உள்ளன. அவற்றைப்பற்றி மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும். உலகில் 'இறந்தவர்களின் நகரம்' என்று அழைக்கப்படும் ஒரு கிராமம் உள்ளது. அங்கு சென்ற யாரும் இது வரை திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த கிராமம் ரஷ்யாவின் வடக்கு ஒசேஷியாவில் உள்ளது. இந்த பகுதி மிகவும் வெறிச்சோடி காணப்படுகிறது. பீதியின் காரணமாக யாரும் இந்த இடத்திற்கு யாரும் வருவதில்லை. உயரமான மலைகளுக்கு நடுவில் மறைந்திருக்கும் இந்த கிராமத்தில் வெள்ளைக் கல்லில் அமைக்கப்பட்ட சுமார் 99 கல்லறைகள் உள்ளன. அங்கு தான் உள்ளூர் மக்கள் இறந்து போன தங்கள் உறவினங்களை அடக்கம் செய்தனர் என கூறப்படுகிறது. இந்த கல்லறைகள் சில நான்கு அடுக்குகள் கொண்டவையாகவும் உள்ளன
இந்த கல்லறைகள் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ஒரு பெரிய கல்லறை. ஒவ்வொரு கல்லறையும் ஒரு குடும்பத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது, அதில் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அடக்கம் செய்யப்படுகிறார்கள்.
இது மட்டுமல்லாமல், இந்த இடம் குறித்து உள்ளூர் மக்களிடையே பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன. இந்த கல்லறைகளுக்கு வருபவர் ஒருபோதும் திரும்பி வருவதில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், அவ்வப்போது சுற்றுலா பயணிகள் இந்த இடத்தின் மர்மத்தை பற்றி அறிய வருகிறார்கள்.
இந்த இடத்தை அடைவதற்கான வழியும் மிகவும் கடினம். மலைகளுக்கு இடையிலான குறுகிய பாதைகள் வழியாக இங்கு செல்ல சுமார் மூன்று மணி நேரம் ஆகும். இங்கு எப்போதும் மோசமான வானிலை நிலவும். இது பயணத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது. இங்குள்ள கல்லறைகளுக்கு அருகே படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என தொல்பொருள் ஆய்வாளர்களின் கூறுகின்றனர். உள்ளூர்வாசிகளிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஆத்மா சொர்க்கத்தை அடைய ஆற்றைக் கடக்க வேண்டும் அதற்கு படகு தேவை என நினைக்கிறார்கள். எனவே இறந்த உடல்கள் படகில் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டன.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு கல்லறையின் முன்னால் ஒரு கிணறு இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். குடும்பங்களை தஙக்ள் உறவினர்களை அடக்கம் செய்த பின்னர் கிணற்றில் நாணயங்களை வீசினர் என்று கூறப்படுகிறது. நாணயம் கீழே இருக்கும் கற்களுடன் மோதினால், ஆன்மா சொர்க்கத்தை அடைந்து விட்டது என்று பொருள்.