'முதல் பிரதமர் நேதாஜி...' மீண்டும் சமாளித்த கங்கனா ரனாவத் - தொடர்ந்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Kangana Ranaut Latest News: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என நடிகையும், பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத் கூறியதற்கு பல தரப்பில் இருந்து கேலிகள் வந்ததை தொடர்ந்து, அதற்கு புதிய விளக்கத்தை அவர் தற்போது தெரிவித்துள்ளார். 

  • Apr 05, 2024, 21:00 PM IST

கங்கனா ரனாவத் தமிழில் தாம் தூம், சந்திரமுகி 2 ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

 

 

 

1 /7

எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே இருக்கும் பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் பாஜகவுக்கு ஆதரவாக நீண்ட நாள்களாக கருத்து தெரிவித்து வந்தார். 

2 /7

தற்போது அவர் நாடாளுமன்ற தேர்தலில் ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் பேட்டியிடுகிறார். 

3 /7

இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் அவர் பேசியிருந்தது பலராலும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு பொது அறிவே இல்லை என கேலி செய்தனர். 

4 /7

நெட்டிசன்கள் ஒரு புறம் இருக்க அரசியல் தலைவர்களும் கங்கனா ரனாவத்தின் பேச்சை விமர்சித்து X தளத்தில் பதிவிட்டிருந்தனர். அதில் தெலுங்கானா முன்னாள் அமைச்சருமான கே.டி. ராமாராவ் அவரது X தளத்தில்,"சுபாஷ் சந்திரபோஸ்தான் எங்களின் முதல் பிரதமர் என்று வடக்கில் இருந்து பாஜக வேட்பாளர் ஒருவர் கூறுகிறார். மேலும் தெற்கில் இருந்து மற்றொரு பாஜக தலைவர் மகாத்மா காந்தி எங்கள் பிரதமர் என்று கூறுகிறார்! இவர்கள் எல்லாம் எங்கிருந்து பட்டம் பெற்றார்கள்?" என யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தார்.   

5 /7

இந்நிலையில், தன் மீதான கேலி பேச்சுக்கு கங்கனா ரனாவத் பதிலளித்துள்ளார். அதில்,"பாரதத்தின் முதல் பிரதமர் யார் என்று எனக்கு கற்றுத் தருபவர்கள் அனைவரும் இந்த ஸ்கிரீன்ஷாட்டைப் படிக்கவும். தொடக்க நிலை நபர்களுக்கு இது பொது அறிவை வழங்கும். என்னை கல்வி கற்கும்படி கூறிய அனைத்து மேதைகளும் நான் 'எமர்ஜென்சி' என்ற திரைப்படத்தை எழுதி, நடித்தேன், இயக்கியுள்ளேன் என்பதை தெரிந்துகொள்ளவும். இது நேரு குடும்பத்தை முதன்மையாக வைத்து எடுக்கப்பட்டது. எனவே குறை கூறுவதை தவிர்க்கவும். உங்கள் IQ-க்கு முன்னால் நான் பேசுவதாக இருந்தால், நான் ஏதுவும் அறியாதவராக இருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள். கேலி உங்கள் மீதுதான்" என குறிப்பிட்டு கொட்டாவி விடும்படியான எமோஜியை பதிவிட்டுள்ளார்.   

6 /7

மேலும், கங்கனா ரனாவத் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட் ஒரு செய்தியாகும். அதாவது, அதில் சுபாஷ் சந்திரபோஸ் ஆசாத் ஹிந்த் (சுதந்திர இந்தியா) என்ற பெயரில் 1943ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி சிங்கப்பூரில் ஒரு அரசை அமைத்து, அதில் தன்னையே பிரதம மந்திரியாகும், அரசின் தலைவராகவும், போர் அமைச்சராகவும் நியமித்துக்கொண்டதாக அந்த ஸ்கிரீன்ஷாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசை சுபாஷ் சந்திரபோஸ் இரண்டாம் உலகப்போரின் போது தொடங்கினார்.   

7 /7

இருப்பினும் நெட்டிசன்கள் கங்கனாவின் இந்த கருத்தையும் கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக, முந்தைய வீடியோவில் கங்கனா பேசியபோது சுதந்திரத்திற்கு பின் நமது பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என கூறியிருந்ததாகவும், தற்போது அதனை மாற்றிக் கூறுவதாகவும் X பதிவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு 1943ஆம் ஆண்டா சுதந்திரம் கிடைத்தது என நெட்டிசன்கள் கங்கனாவை கேலி செய்து வருகின்றனர்.