Problem In Vanangaan Movie Release : பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படம், வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Problem In Vanangaan Movie Release : தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் பாலா. இவர் இயக்கத்தில் சமீபத்தில் உருவான படம், வணங்கான். பெரிய அளவில் இசை வெளியீட்டு விழா செய்யப்பட்டு, இதற்கு ப்ரமோஷன் செய்யப்பட்டது. இந்த நிலையில், படம் ஜனவரி 10ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், தியேட்டர் ரிலீஸில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், வணங்கான். பாலா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா.
சில காரணங்களினால் சூர்யா இந்த படத்திலிருந்து விலகிய பிறகு, அருண் விஜய் இந்த படத்தில் ஹீரோவாக கமிட் ஆனார். கடந்த ஓராண்டுக்கும் மேல், இப்படத்தின் பணிகள் நடைப்பெற்றது.
வணங்கான் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ்னடித்திருக்கிறார். கூடவே, சமுத்திரகனி, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
வணங்கான் படம், கடந்த வருடமே வெளியாக இருந்தது. இதையடுத்து, ஒரு வழியாக இந்த பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்தது.
பல பிரச்சனைகளை தாண்டி, படம் இன்று வெளியாக இருந்த சமயத்தில், இதனை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, KDM பிரச்சனை காரணமாக, படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வணங்கான் படத்தை பார்க்க காலை ஷோவிற்கு புக் செய்து வைத்திருந்த மக்கள், இப்போது 1 மணி ஷோவிற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.