இந்த மாதம் முதல் இத்தனை மாற்றங்கள், உங்கள் வாழ்க்கையில் நேரடி தாக்கம்: முழு விவரம் இதோ

Major Changes From December: டிசம்பர் மாதம் முதல் வங்கி, தனிநபர் நிதி உள்ளிட்ட பல துறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் உங்கள் நேரடி நிதி பரிமாற்றங்களை நேரடியாக பாதிக்கின்றன. அனைவரும் இந்த மாற்றங்களைப் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம், இல்லையெனில் நீங்கள் சில சிக்கல்களில் மாட்டிக்கொள்ளலாம்.

1 /5

இன்று அதாவது டிசம்பர் 1 ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. அரசு எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை மதிப்பாய்வு செய்கின்றன. இருப்பினும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.  

2 /5

நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்து, எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு அதிர்ச்சியான செய்தி உள்ளது. இன்று முதல் நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி வரும். இப்போது கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், செயலாக்கக் கட்டணமாக ரூ.99 தனி வரி செலுத்த வேண்டும்.

3 /5

நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இன்று முதல் அதாவது டிசம்பர் முதல் தேதியில் இருந்து வங்கி, சேமிப்பு கணக்கில் கொடுக்கப்பட்ட வட்டியை குறைத்துள்ளது. வங்கி, சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 2.90 சதவீதத்தில் இருந்து 2.80 சதவீதமாகக் குறைத்துள்ளது.  

4 /5

யுனிவர்சல் அக்கவுன்ட் எண்ணை (UAN) உங்கள் ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆகும். அதாவது நவம்பர் 30 ஆம் தேதிக்குள் யாராவது இந்தப் பணியைச் செய்திருக்கவில்லை என்றால் இன்றிலிருந்து அந்த நிறுவனத்தில் இருந்து வரும் பங்களிப்பில் சிக்கல் ஏற்படலாம். இது தவிர, EPF கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவும் முடியாது.

5 /5

பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் மற்றொரு பின்னடைவை சந்தித்துள்ளனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் தீப்பெட்டியின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இன்று முதல் 1 ரூபாய்க்கு கிடைக்கும் தீப்பெட்டி 2 ரூபாய்க்கு கிடைக்கும். கடைசியாக 2007ல் தீப்பெட்டிகளின் விலை உயர்த்தப்பட்டது. தீப்பெட்டி தயாரிக்கும் மூலப்பொருளின் விலை அதிகரித்துள்ளதால், தீப்பெட்டியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.