ஆனி மாதத்தில் வாழ்க்கையை அட்டகாசமாக அனுபவிக்கப் போகும் ‘சில’ ராசிகள்!

ஆனி மாதம் 2023 ராசிபலன்: இந்த வருடம் ஆனி மாதம் 2023 ஜூன் மாதம் 16ஆம் தேதி பிறக்கிறது. அன்று சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். இது தவிர இந்த மாதத்தில், சனி வக்கிரப் பெயர்ச்சி, புதன் பெயர்ச்சி, செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன. இந்நிலையில் ஆனி மாதத்திற்கான அனைத்து ராசிகளுக்கும் ஆன ராசி பலன்களை அறிந்து கொள்ளலாம்.

1 /13

ஆனி மாதத்தில், மேஷ ராசியில் குரு மற்றும் ராகு சேர்ந்து சென்றிருக்கின்றனர். இதனால் இவர்களுக்கு பிரச்சினைகள் எதையும் சந்திக்க வேண்டிய நிலை வராது. அப்படியே வந்தாலும் எளிதாக சமாளித்து விடுவார்கள். உடல் நலம் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. வீடு வாகனம் சொத்து வாங்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். அலுவலகத்தில் பனி சுமை இருந்தாலும், கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

2 /13

ஆனி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் அனைத்தும் தேடி வரும். திருமணம் கை கூடாதவர்களுக்கு, இந்த மாதம் திருமணம் கைகூடி வரும். உறவுகளில் நெருக்கம் ஏற்படும். எனினும் அடுத்தவர் விஷயங்களில் அதிகம் தலையிடாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்தினால் வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும் என்பதால், கடன்களை அடைத்து நிம்மதியாக இருப்பீர்கள்.

3 /13

ஆனி மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும் எனலாம். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். திருமண உறவுகள் கைகூடும். குரு ராகுவின் சேர்க்கை காரணமாக வேலை தொழிலில் இருப்பவர்களுக்கு, முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். சம்பள உயர்வு ஊதிய உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் இருப்பார்கள்.  

4 /13

ஆனி மாதம் கடக ராசிக்காரர்களுக்கு சற்று ஏற்ற இறக்கம் உள்ள மாதமாக இருக்கும். முதலீடு விஷயத்தில் கவனம் தேவை. ஏனென்றால் நிதி இழப்புக்கான வாய்ப்பு உண்டு. எனினும் நீண்ட காலம் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நிதிநிலை மேம்படும் என்பதால், கடனை திரும்ப செலுத்த வாய்ப்பு உள்ளது. உடல்நலம் சிறப்பாகவே இருக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விரும்புவர்களின் முயற்சி ஈடேறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

5 /13

ஆனி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்கள் சிறந்த பலனை பெறுவார்கள். இதனால் வரை வேலையில் இருந்து தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையிலும் எதிர்பார்த்த முன்னேற்றமும் வருவாயும் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும் என்பதால் வாங்கிய கடனை திருப்பச் செலுத்துவதற்கான வாய்ப்பு அதிகம். உங்கள் பேச்சால் மற்றவர்களை இருப்பீர்கள். வீட்டில் இணக்கமான சூழ்நிலை நிலவும்.

6 /13

ஆனி மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு அனுகூலமான மாதமாக இருக்கும். வேலையில் தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை காண்பார்கள். வருமானம் அதிகரிக்கும். கை வைத்த அனைத்து காரியமும் வெற்றி அடையும். எனினும், நிபுணர்கள் மற்றும் மூத்தவர்களின் ஆலோசனை பெற்று நடந்தால், ஆதாயம் பன்மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். உடல் நிலையும் சிறப்பாகவே இருக்கும். 

7 /13

துலாம் ராசிக்காரர்களுக்கு ஆனி மாதம் சிறப்பான பலன்களை கொடுக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். பணியிடத்தில் உங்கள் வேலையை மேலதிகாரி பாராட்டுவார். பலன் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனினும், வெளிநாட்டில் வேலை அல்லது படிப்பு சார்ந்த முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு சில தடைகள் வரலாம். எனினும், மனம் தளராமல் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

8 /13

ஆனி மாதத்தில் விருச்சிக ராசியினர் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. இதனால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். உங்கள் பேச்சு செயல் அனைத்திலும் கவனம் தேவை. . எனினும் பிரச்சினைகளை எளிதாக சமாளித்து விடுவீர்கள். நீங்கள் நினைத்ததை விட அதிக வருமானம் இருக்கும். வேலையில் கூடுதல் பணி சுமை இருக்கும். மேலதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்ளவும். உங்கள் வேலையை கடமையை கண்ணும் கருத்துமாக செய்து முடித்தால், பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்ப உறுப்பினர்களையும் சிறிது அனுசரித்து செல்லவும். 

9 /13

தனுசு ராசிக்காரர்களுக்கு ஆனி மாதம் சிறிது ஏற்ற இறக்கம் கொண்ட மாதமாக இருக்கும். அலுவலகத்தில் வேலையை பொறுப்பாக செய்து முடிப்பது நல்லது. ஏனென்றால் கவன குறைவினால் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் திருமணம் முயற்சி சுப காரியங்கள் போன்றவற்றிற்கு மிகவும் சாதகமான மாதமாக இருக்கும். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். சொந்த தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு ஏற்ற மாதம் இது. மாணவர்கள் படிப்பில் சிறிது ஈடுபாட்டுடன் இருப்பது நல்லது.

10 /13

மகர ராசிக்காரர்களுக்கு ஆனி மாதம் அவ்வளவு சிறப்பான மாதமாக இருக்காது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் சச்சரவை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். எனினும் உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பண வரவு மகிழ்ச்சியை கொடுக்கும் என்றாலும், நிதி பரிவர்த்தனைகளில் சிறிது கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் செலுத்துங்கள். உறவினர்களால் சில பிரச்சனைகள் வரலாம். எனவே கவனமாக இருக்கவும்.

11 /13

ஆனி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களின் பொருளாதார நிலைமை மிகவும் அற்புதமாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நல்ல செய்தி தேடி வரும். சுப செலவுகளும் அதிகரிக்கும். பண வரவு திருப்தியை தரும். வாகனம் நகை போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியை கொடுக்கும். எனினும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குழந்தைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். 

12 /13

மீன ராசிக்காரர்களுக்கு ஆனி மாதத்தில் குடும்பத்தில் சில பிரச்சனைகள் காரணமாக சில தர்ம சங்கடங்களையும் சிக்கல்களையும் சந்திக்கலாம். குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்பு ஏற்படலாம். எனினும் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நிதி நிலையை பொறுத்த வரை வருமானம் எதிர்பார்த்த அளவில் இருக்கும். தொழிலில் சிறிது முன்னேற்றம் இருக்கும். எனினும் சிக்கனமாக இருப்பது நிதி பிரச்சனைகளை தவிர்க்க உதவும். அலுவலகத்தில் பல தடைகள் வந்தாலும், இறுதியாக நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் விஷயத்தில் சிறிது கவனமாக இருப்பது நல்லது.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.