ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் 6 தமிழ் படங்கள்! எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Tamil Movies Recommended For Oscar Awards 2025 அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருதுகளுக்கு, 6 தமிழ் படங்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

Tamil Movies Recommended For Oscar Awards 2025 திரைப்படத்துரையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படுகிறது, ஆஸ்கர் விருதுகள். இந்த வருடம் வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள், அடுத்த வருடம் வழங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், இதற்கு 6 தமிழ் படங்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அந்த படங்கள் என்னென்ன என்பதையும், அவற்றை எந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம். 

1 /8

ஆஸ்கர் விருதுகளுக்கு சில இந்திய படங்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இதில், 6 தமிழ் படங்களும் இடம் பெற்றிருக்கிறது. 

2 /8

லாபட்டா லேடீஸ்: கிரன் ராவ் இயக்கிய இந்த படம், ஆஸ்கர் விருதுக்குள் நுழைந்த முதல் படமாக தேர்வாகியிருக்கிறது. இந்த படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். 

3 /8

கொட்டுக்காளி: கொட்டுக்காளி படத்தை, படக்குழு இன்னும் ஓடிடியில் வெளியிடாமல் இருக்கிறது. ஆஸ்கருக்கு பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

4 /8

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். 

5 /8

ஜமா: ஜமா திரைப்படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம். 

6 /8

மகாராஜா: மகாராஜா படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.

7 /8

வாழை படத்தை செப்டம்பர் 27ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம். 

8 /8

விக்ரம் நடித்த தங்கலான் படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.