என்னது சிவாங்கிக்கு கல்யாணமா? அதுவும் அவரே வெளியிட்ட பதிவு!

Sivaangi Krishnakumar Latest News : டெலிவிஷன் நிகழ்ச்சிகள் மூலம் பெரிய ஸ்டாராக வளர்ந்து நிற்கும் சிவாங்கிக்கு, திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Sivaangi Krishnakumar Latest News : சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர், சிவாங்கி. இவரது தந்தையும் தாயும் பாடகர்கள் என்பதால் இவருக்கும் சங்கீத கலை, தானாக வந்து விட்டது. ஆரம்பத்தில் இவர் நடப்பதையும் பேசுவதையும் கலாய்த்தவர்கள், இப்போது இவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். சிவாங்கி தற்போது ஆல்பங்கள் பாடுவது, படங்களில் பின்னணி பாடகியாக இருப்பது என பிசியாக வலம் வருகிறார். இந்த நிலையில்தான், இவரது திருமணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. 

1 /7

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மகிழ்ச்சிப்படுத்தும் போட்டியாளராகவும், திறமையான பாடகியாகவும் இருந்தவர், சிவாங்கி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இவருக்கு பெரிய புகழை தேடித்தர, தொடர்ந்து இவருக்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 

2 /7

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து, சிவாங்கிக்கு இன்னொரு பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 2019ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி சமைக்கவே தெரியாத கோமாளியாக கலந்து கொண்டார். 

3 /7

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சிவாங்கியை இன்னும் நன்றாக தெரிந்து கொள்ள மக்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவரை கலாய்த்தவர்களுக்கு கூட, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இவரை பிடிக்க ஆரம்பித்தது. 

4 /7

துருதுரு பேச்சு, சத்தமான சிரிப்பு என தனது இயல்பான குணாதிசயங்களினாலேயே சிவாங்கி அனைவரையும் ஈர்த்தார். குக் வித் கோமாளி 2வில் போட்டியாளராக பங்கேற்ற அஷ்வின் மீது இவருக்கு காதல் இருப்பதாக கூறப்பட்டது. 

5 /7

சிவாங்கி, தற்போது ஒரு பக்கம் மேடை நிகழ்ச்சிகள், ஒரு பக்கம் படங்களில் பாடுவது என படுபிசியாக இருக்கிறார். 

6 /7

சிவாங்கி, சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று அவரது திருமணம் குறித்த வதந்தியை கிளப்பிவிட்டுள்ளது. 

7 /7

அந்த பதிவில் சிவாங்கி “நான் சமூக வலைதளங்களை ஓபன் செய்தாலே திருமண செய்திகள், நிச்சயதார்த்த செய்திகள், கர்பமாக இருக்கும் செய்திகள்தான் குவிகின்றன. நான் இப்போது கட்டத்தில்தான் இருக்கிறேனா?” என்று கேட்டிருக்கிறார். இதனால், இவரும் ஒரு வேலை திருமண செய்தி கூறுவாரோ என பலர் பேசி வருகின்றனர்.