குரு-சனியால் அதிர்ஷ்ட யோகம்.. 2024 இல் இந்த ராசிகளுக்கு பொற்காலம்

2024 புத்தாண்டு தொடங்க இன்னும் அதிக நாட்கள் இல்லை. நடப்பு ஆண்டில் வெற்றி பெறாத பணிகள் வரும் புத்தாண்டில் நிறைவேறும் என்பதால் அனைவரும் புத்தாண்டுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். வேத ஜோதிடத்தின்படி, புத்தாண்டில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் மற்றும் நிலைகளில் சிறப்பு மாற்றங்கள் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வரும் 2024ம் ஆண்டு புத்தாண்டிலும் இதே போன்றதொரு தற்செயல் நிகழ்வு நடக்கப் போகிறது.

ஜோதிடத்தின் படி, 2024 ஆம் ஆண்டில் சனி மற்றும் குருவின் சிறப்பு நிலை இருக்கும். 2024 ஆம் ஆண்டில், நீதி மற்றும் பலன்களைத் தரும் சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் நீடிக்கிறார். இது தவிர, குரு மே 2024 வரை தனது சொந்த ராசியில் இருக்கும், பின்னர் அது ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடையும். இது தவிர மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் பெயர்ச்சி அடைவார்கள். எனவே 2024 ஆம் ஆண்டில் 4 முக்கிய கிரகங்களின் ஏற்படும் மாற்றும் பல ராசிகளின் வாழ்க்கையில் சுப பலன்களையும் மகிழ்ச்சியையும் தருக்கூடும். அதன்படி 2024ம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என்று தெரிந்து கொள்வோம்.

1 /5

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். சுப கிரகமான குரு மே மாதம் வரை மேஷ ராசியில் இருப்பார். இதன் மூலம் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசமாகி ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 2024 ஆம் ஆண்டில் பல இலாப வாய்ப்புகள் மற்றும் வெற்றிகள் பெறக்கூடும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் செல்வமும் உயரும் வாய்ப்பு உள்ளது. நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். 2024 ஆம் ஆண்டு வேலை செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

2 /5

கடகம்: 2024 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில், குரு உங்கள் ராசியிலிருந்து 10 ஆம் வீட்டில் அமர்வார். அத்தகைய சூழ்நிலையில், 2024 ஆம் ஆண்டில் நல்ல வருமானமும் வெற்றியும் அடையப்படும். உங்கள் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். கடக ராசிக்காரர்களுக்கு ஆண்டு முழுவதும் சனியின் ஆசிகள் இருக்கும், அதனால் செல்வமும் மரியாதையும் அதிகரிக்கும். நீங்கள் ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் நிதி ஆதாயம் கிடைக்கும். குடும்பம் மற்றும் திருமண சூழ்நிலை நன்றாக இருக்கும், அதே நேரத்தில் 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு ஆரோக்கியத்தின் அடிப்படையில் கலவையாக இருக்கும்.

3 /5

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு வரும் புத்தாண்டு மகிழ்ச்சியை தரும். ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் உங்கள் ராசியில் சூரியனுடன் சேர்ந்து இரண்டாம் வீட்டில் அமர்வார். இது தவிர, சுக்கிரன் மற்றும் புதன் கிரகங்கள் உங்களுக்கு சுப பலன்களை ஏற்படுத்தும். தொழிலில் நல்ல வெற்றியும் மரியாதையும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வேலைகளுக்கான நல்ல சலுகைகளைப் பெறலாம், இது அவர்களின் நிதி நிலைமையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் ஒற்றுமையும் நிலவும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள்.

4 /5

கும்பம்: 2024 ஆம் ஆண்டு சனிபகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் ஆண்டு முழுவதும் இருப்பார். இதுமட்டுமல்லாமல் குருவால் ஆண்டு முழுவதும் நல்ல பலன்களை பெறுவீர்கள். வேலை மற்றும் நிதி ஆதாயத்தில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றமும், வியாபாரத்தில் வளர்ச்சியும் ஏற்படும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும், இதன் காரணமாக பணம் சம்பாதிப்பதற்கான நல்ல அறிகுறிகள் உள்ளன. புதிய திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள்.

5 /5

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.