பங்குனி உத்திரத்தில் வரும் சந்திர கிரகணம்... 5 அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்..!

மீன ராசியில் சூரியனும் ராகுவும் இணைந்து இருக்கும் நிலையில், சந்திரனும் கேதுவும் கன்னி ராசியில் சேரும் நாளில் சந்திர கிரகணம் உருவாகிறது. பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் வரும் சந்திர கிரகணம் ஒரு அதிசய நிகழ்வு என்று கூறப்படுகிறது.

சூரியன் சந்திரன் மற்றும் பூமி மூன்றும் நேர் கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனுக்கு இடையில் பூமி வருவதால், சூரியனின் கதிர்கள் சந்திரன் மீது படாமல் தடுக்கப்படும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

1 /7

பங்குனி மாத உத்திர நட்சத்திரம் தினத்தன்று வரும் சந்திர கிரகணம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒலி பண்டிகை என்ற சந்திர கிரகணம் ஏற்படுவதால் இது அதிசயமான நிகழ்வு என்று ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

2 /7

மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் மங்களகரமானதாக இருக்கும். வேலையில் தொழிலில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். உறவுகளுக்கிடையே இணக்கம் ஏற்படும். குடும்பத்துடன் இனிமையாக நேரத்தை கழிப்பீர்கள்.

3 /7

ரிஷப ராசியினருக்கு நிதி ஆதாயம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

4 /7

சிம்ம ராசியினருக்கு சந்திர கிரகணம் ஏற்படும் நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

5 /7

தனுசு ராசியினர் வேலையில் வெற்றி பெறுவார்கள். சத்தியம் நிம்மதியும் நிலைத்திருக்கும். மாணவர்கள் தேர்வுகளை சிறப்பாக எழுதுவார்கள். உத்தியோகஸ்தர்கள் சாதகமான பலன்களை பெறுவார்கள்.

6 /7

மகர ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் சிறப்பாக இருக்கும். வாகனம் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உறவுகளில் இனிமை இருக்கும்.

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.