Bugatti 9 0: சூப்பர் லுக்குடன் செம விலையில் புகாட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

புகாட்டி 9.0 கிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைப்பு
மடிக்கக்கூடிய ஸ்கூட்டராக அறிமுகமாகியுள்ளது புகட்டி 9.0 ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டர். மடிக்கும் வசதி இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம். இது அதிவிரைவு மற்றும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான புகாட்டியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அழகிய வடிவுட்ன் புகாட்டி 9.0 இலகுரக, பளபளப்பான மற்றும் மடிக்கக்கூடிய வடிவமைப்புடன் வருகிறது.

16 கிலோவிற்கும் குறைவான எடை மற்றும் மெக்னீசியம் கலவை சட்டத்தைக் கொண்டுள்ளது புகாட்டி 9.0

1 /4

புகாட்டி நிறுவனத்தின் முதல் கிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 18.5 மைல்கள் அதாவது மணிக்கு 30 கிலோமீட்டர்கள் செல்லக்கூடியது.. இது வெள்ளி, கருப்பு மற்றும் அஜில் ப்ளூ ஆகிய 4 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.  

2 /4

இந்த எலக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் சுமார் சுமார் 35 கிலோமீட்டர்கள் செல்லக்கூடியது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 35 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடியது புகாட்டி 9.0.

3 /4

கிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் முன்/பின் டர்ன் சிக்னல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கொடுக்கப்பட்டுள்ள எல்இடி டிஸ்ப்ளே சவாரி தொடர்பான தகவல்களை தருகிறது. இதில் 9 இன்ச் டயர்கள் உள்ளன. இது பாதுகாப்பிற்காக இரட்டை பிரேக் அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் முன் கை பிரேக் மற்றும் பின்புறத்தில் எலக்ட்ரானிக் ஏபிஎஸ் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன.

4 /4

புகாட்டி 9.0 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை புகாட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் $1,200 (தோராயமாக ரூ. 94,741)க்கு விற்பனைக்குக் கிடைக்கிறது. சில Costco அவுட்லெட்களில் $900 (ரூ. 71,055)க்கு கிடைக்கிறது.