தபால் அலுவலகத்தில் முதலீடு செய்வது என்பது மக்களின் விருப்பமாக இருந்து வருகிறது. அஞ்சலகத் திட்டம் பாதுகாப்பான முதலீடு. பல தபால் அலுவலகத் திட்டங்களும் உங்களுக்கு சிறந்த வருமானத்தைத் தருகின்றன. நல்ல வருமானம் கிடைக்கும் திட்டங்களாகவும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்த பணத்தை, குறுகிய காலத்தில் இரட்டிப்பாக மாற்றிட முடியும். அதனை குறித்து இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
டைம் டெபாசிட் திட்டம்: 1 முதல் 3 வருட கால டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 5.5 சதவீதம் வட்டி கிடைக்கும். இதில், உங்கள் பணம் இரட்டிப்பு ஆக 13 ஆண்டுகள் ஆகலாம். அதே சமயம், 5 ஆண்டு திட்டத்திற்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எனவே, அதில், முதலீட்டு பணம் 11 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிவிடும்.
ரெக்கரிங் டெபாசிட் திட்டம்: போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதம் 5.8 ஆகும். இதில் உங்களது பணம் 12 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிவிடும்.
மாத வருமானத் திட்டம்: போஸ்ட் ஆபீஸ் மாத வருமானத் திட்டத்தின் வட்டி விகிதம் 6.6 ஆகும். இதில் உங்களது பணம் 11 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: போஸ்ட் ஆபீஸ் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் 7.4 ஆகும். இந்த திட்டத்தில், உங்களது பணம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிவிடும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா: இந்த திட்டத்தில் தான், தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் அதிகப்பட்ச வட்டி கிடைக்கிறது. இதன் வட்டி வகிதம் 7.6 ஆகும். இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்காக செயல்படுகிறது. இதில் முதலீடு செய்யும் தொகை 9 ஆண்டுகளில் இரட்டிப்பாக மாறிவிடும்.
கிசான் விகாஸ் பத்ரா: கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கு தற்போது 6.9 சதவீத வட்டி விகிதம் உள்ளது. முதலீட்டிற்கு இதுவும் ஒரு நல்ல வாய்ப்பாகும். இந்த விகிதத்தில் நீங்கள் முதலீடு செய்தால், உங்கள் தொகை 124 மாதங்களில் அதாவது 10 ஆண்டுகள் 4 மாதங்களில் இரட்டிப்பாகும். மேலும், இதற்கு அரசின் முழு உத்தரவாதமும் உள்ளது.