ஜூன் 27 புதனின் உதயத்தால் கவலைகளை எதிர்கொள்ளப் போகும் துரதிருஷ்ட ராசிக்காரர்கள்!

Budhan Udhayam Palangal June 27 : கிரகங்கள் அனைத்திற்குமே பெயர்ச்சி என்பது இயல்பானது. கிரக பெயர்ச்சிகளில் கிரகங்களின் ராசி, நட்சத்திரம், உதயம், அஸ்தமன நிலைகள், வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களின் தாக்கம் அனைவரின் வாழ்விலும் எதிரொலிக்கும்...

நாளை அதாவது ஜூன் 27 ஆம் தேதி, புதன் பகவான் மிதுனத்தில் உதயமாகவிருக்கிறார். புதன் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும். சில ராசிகளில் இதன் தாக்கம் அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கும். புதனின் உதயத்தால் கஷ்டப்படப்போகும் துரதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

1 /7

புத்திக்கூர்மை, வியாபாரம், பேச்சாற்றல் ஆகியவற்றுக்கு அதிபதியான புதன் அஸ்தமனத்தில் இருந்து உதயமாகிறார். இந்த உதயம் பலருக்கு உற்சாகமானதாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கும். அந்த ராசியில்லா ராசிக்காரர்கள் யார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.  

2 /7

இழுபறியாக இருந்த வழக்குகளுக்கு முடிவு வருவது பிரச்சனையாக இருக்கும். துலாம் ராசியினருக்கு தடையாக பல இன்னல்கள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது. உதவிகள் கிடைக்காது, பணம் விரயம் ஆகும். கோப்புகள் கையாள்வதில் கவனத்துடன் இருக்க வேண்டும்

3 /7

கடனை அடைப்பது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகள் மூலம் லாபம் உண்டாகும். கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த சில பணிகள் பாதகமான முடிவுகளை தரும். உத்தியோகத்தில் நெருக்கடிகள் குறையும்.

4 /7

விருச்சிக ராசிக்காரர்கள் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். உடன் பிறந்தவர்களிடம் தகராறு வைத்துக் கொள்ள வேண்டாம். கணவன், மனைவிக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பழைய நினைவுகளால் மனதில் குழப்பங்கள் உண்டாகும். 

5 /7

கடக ராசியினர் அனுசரித்து செல்வது நல்லது. வாகனம் தொடர்பான விரயங்கள் மனக்கவலையை அதிகரிக்கும். முதலீடு குறித்த எண்ணங்கள் வந்தாலும், அவற்றை ஒத்திபோடவும். வேலையாட்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். எல்லா விஷயங்களிலும் சிந்தித்து செயல்படவும். 

6 /7

குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்ல வேண்டிய காலம் இது மேஷ ராசியினரே. உணவுத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாக்குறுதி கொடுப்பதற்கு முன் சிந்தித்து முடிவெடுக்கவும்.

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது