என்னுடைய முடிவு ஐபிஎல் நிர்வாகத்தின் கையில் - ஓய்வு குறித்து தோனி அறிவிப்பு

MS Dhoni, IPL 2025 : அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவது என்பது ஐபிஎல் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து இருக்கிறது என எம்எஸ் தோனி அறிவித்துள்ளார்.

 

Dhoni retirement news : ஐபிஎல் 2025 தொடரில் விளையாடுவது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் விளையாடுவது என்பது ஐபிஎல் நிர்வாகத்தில் கையில் இருக்கிறது என கூறியுள்ளார்.

1 /8

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி, கடந்த ஆண்டு தன்னுடைய கேப்டன்ஷிப்பை ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஒப்படைத்தார். இதுவே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தாலும், ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் அறிவித்தார் தோனி.

2 /8

கேப்டன்ஷிப் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது கூட ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் தெரிந்தது. ஐபிஎல் கேப்டன்களுக்கான போட்டோஷூட் நடத்தப்பட்டபோது தான் ருதுராஜ் அந்த போட்டோவில் இருந்தபோது, தோனி கேப்டன்ஷிப்பில் இருந்து விலகியது தெரியவந்தது.

3 /8

இருப்பினும் தோனி ஐபிஎல் 2024ல் விளையாடினார். எதிர்வரும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்த தகவல் இன்னும் சஸ்பென்ஸாகவே இருக்கிறது.

4 /8

இது குறித்து தோனி இப்போது முதன்முறையாக பேசியுள்ளார். ஐபிஎல் தொடரில் நான் விளையாடுவது என்பது குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

5 /8

ஐபிஎல் நிர்வாகம் விரைவில் அதன் விதிமுறைகளை வெளியிட இருப்பதாவும், அந்த விதிமுறைகள் தான், நான் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதை முடிவு செய்யும் என்றும் தோனி கூறியுள்ளார்.

6 /8

அதாவது தோனி இன்னும் ஓய்வு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஐபில் நிர்வாகம் அடுத்த தொடருக்கான பிளேயர் ரீட்டென்ஷன் விதிமுறைகளை வெளியிட்டபிறகு உறுதியான முடிவை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

7 /8

அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுப்பேன் என்றும் எம்எஸ் தோனி கூறியுள்ளார். ஒருவேளை இம்பாக்ட் பிளேயர் விதிமுறை, பிளேயர் ரீட்டென்ஷன் விதிமுறைகள் தோனிக்கு சாதகமாக இருந்தால் அவர் விளையாட வாய்ப்பு இருக்கிறது. 

8 /8

இல்லையென்றால் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம். அதனால் ரசிகர்கள் கடைசியாக தோனி ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாடிவிட்டு அதன்பிறகு ஓய்வு பெற வேண்டும் என இப்போதே வேண்டுகோள் விடுக்க தொடங்கியுள்ளனர்.