மீண்டும் நீளமாக முடி வளர்த்த தோனி! வைரலாகும் புதிய போட்டோஸ்!

MS Dhoni New Look: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, நீளமாக முடி வளர்த்து புது லுக்கில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

1 /7

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி புது ஹேர்ஸ்டைலில் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

2 /7

உலகளவில் பிரபலமாக இருக்கும் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர், எம்.எஸ்.தோனி. இவரை பலரும் ‘கேப்டன் கூல்’ என்று அன்புடன் அழைப்பது வழக்கம். 

3 /7

தோனி எப்போதாவதுதான் தனது சிகை அலங்காரத்தை மாற்றுவார். தற்போது பல நாட்கள் கழித்து புதிதாக ஒரு ஹேர்ஸ்டைலை செய்துள்ளார். 

4 /7

இவருக்கு ஆலிம் ஹக்கிம் என்பவர் புது ஹேர்ஸ்டைலை செய்துள்ளார். சிகை அலங்காரத்திற்கு பிறகு எடுத்த புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

5 /7

தோனியின் இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களில் இணையத்தில் வைரலாக தொடங்கி விட்டது. 

6 /7

தோனியின் புகைப்படத்தை பகிர்ந்து வரும் ரசிகர்கள், “பார்ட் டைமாக நடிக்க வந்து விடுங்கள் தலைவா..” என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

7 /7

தோனி, கடைசியாக 2007ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது நீளமான தலைமுடி வைத்திருந்தார். அதன் பிறகு, தற்போதுதான் அவர் கொஞ்சம் நீளமாக முடி வளர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.