ஷாம்பூவை தண்ணீரில் கலக்கிதான் யூஸ் பண்ணனும்! ஏன் தெரியுமா?

Must Dilute Shampoo In Water Before Hair Wash : நாம் தலைக்கு குளிக்கும் முன்னர், கண்டிப்பாக ஷாம்பூவை தண்ணீரில் கலக்கி பின்னர் தேய்க்க வேண்டும். அது ஏன் தெரியுமா? 

Must Dilute Shampoo In Water Before Hair Wash : நம்மில் பலருக்கு, ஷாம்பூவை அப்படியே தலையில் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், இந்த பழக்கத்தினால் முடி பெரிதளவில் பாதிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனால், மருத்துவர்கள் பலர் முடியை நன்றாக பராமரிக்க நாம் கண்டிப்பாக ஷாம்பூவை தண்ணீரில் ஊற வைத்து பின்னர் அதை உபயோகிக்க வேண்டும் என கூறுகின்றனர். 

1 /8

சமமான விநியோகம்: ஷாம்பூவை தண்ணீரில் கலப்பதால், நமது தலையில் இருக்கும் அனைத்து முடிக்கும் ஷாம்பூவை படற வைக்க முடியும். இதனால் உச்சந்தலையும் சேர்ந்து சுத்தமாகும்.

2 /8

மென்மையாக்கும்: ஷாம்பூவில் இருக்கும் சர்பாக்டான்ட்கள், அதை அப்படியே தலையில் தேய்க்கும் போது முடியை கடினமாக்கும். இது ஆகாமல் தடுக்க, ஷாம்பூவை தண்ணீரில் ஊற வைக்கலாம். இதனால், முடி உடைவதையும் தடுக்கலாம். 

3 /8

ஆழ்ந்த சுத்தம்: ஷாம்பூவின் அளவு குறைவாக இருந்தாலும் அதை தண்ணீரில் கலக்கும் போது அதிகமாகும். இது, தலை முடியின் ஆழ்ந்த சுத்தத்திற்கு உதவும்.

4 /8

குறைவான தயாரிப்பு கழிவுகள்: ஷாம்பூவை அதிகம் பயன்படுத்த விரும்பாதோர், அதிகம் பயன்படுத்த முடியாதோர் இதனை தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம். இதனால், ஷாம்பூவும் மிச்சம், பணமும் மிச்சம்.

5 /8

ஆழ்ந்து அலசும்: ஷாம்பூவை, தண்ணீரில் கலந்து குறைவாக பயன்படுத்தினாலும், தலைமுழுவதும் சுத்தமாக்கும். இதனால், புத்துணர்ச்சி உணர்வு மேலோங்கும்.

6 /8

முடிக்கு ஏற்ப மாறுதல்கள்: நம் முடிக்கு ஏற்ற அளவு, முடியின் நிலைக்கு ஏற்ற அளவு ஷாம்பூக்களை தண்ணீரில் கலந்து பயன்படுத்தி கொள்ளலாம். 

7 /8

உச்சந்தலை பராமறிப்பு: பல சமயங்களில், ஷாம்பூவை அப்படியே தலையில் தேய்ப்பதால் எரிச்சல் போன்ற உணர்வு உண்டாகும். இதனை, தண்ணீரில் கலந்து ஷாம்பூ தேய்ப்பதால் தவிர்க்க முடியும்

8 /8

நீரேற்றம்: ஷாம்பூவை தண்ணீருடன் கலப்பது, உங்கள் தலைமுடிக்கு கூடுதல் ஈரப்பதத்தை சேர்க்கும். குறிப்பாக நீங்கள் ஈரப்பதமூட்டும் ஷாம்பூவைப் பயன்படுத்தினால் நிச்சய பலன் கிடைக்கும்.