Dangerous Places: விளையாட்டுக்குக்கூட இங்கு செல்ல நினைக்க வேண்டாம்

Dangerous Places in World: இந்த உலகம் பல மர்மங்களை தன்னுள் புதைத்து வைத்துக் கொண்டுள்ளது. கற்பனையிலும் கூட அங்கு செல்ல நினைக்கவேண்டாம். 

சாகசங்கள் மற்றும் மர்மங்களைத் தேடி பலர் புதிய இடங்களை நோக்கி செல்கிறார்கள். மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான மர்மமான இடங்கள் என்று சொல்லக்கூடிய சில இடங்களை குறித்து பார்ப்போம்.

1 /9

Bloody Pond குளம் ஜப்பானில் மிகவும் பிரபலமான இடம். அதன் வெப்பநிலை 194 பாரன்ஹீட் ஆக இருப்பதால், அங்கு நீச்சல் செய்வதது தடைசெய்யப்பட்டுள்ளது. இதில் அதிக அளவு இரும்பு மற்றும் உப்பு இருப்பதால், இதன் நீர், இரத்தம் போல் சிவப்பாக காட்சியளிக்கிறது. ஏரி நீரின் மேற்பரப்பில் இருந்து நீர் ஆவியாகிக்கொண்டே இருக்கிறது. இந்த இடத்தை தூரத்தில் இருந்து பார்க்கும் போது ரத்தம் கொதிப்பது போல் உள்ளது. இதனால் மக்கள் இங்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

2 /9

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள காங்கோ மற்றும் ருவாண்டா ஜனநாயகக் குடியரசின் எல்லையில் மரண ஏரி அமைந்துள்ளது. இது கிவு ஏரி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏரியின் நீர் லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதன் ஆழமான நீரில் நிறைய மீத்தேன் வாயு மறைந்துள்ளது. இந்த ஏரி நீரில் மேகம் ருவானால், அது நச்சுக்காற்றான மீத்தேன் வாயுவை அதிகமாக கொண்டுவரும். இதில், லட்சக்கணக்கான மக்கள் இறக்கக்கூடும் என்றும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

3 /9

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மற்றும் யோக்யகர்த்தா எல்லையில் அமைந்துள்ள ஒரு செயலில் உள்ள எரிமலை மவுண்ட் மெராபி. 1548 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும் இந்தோனேசியாவின எரிமலை இதுவாகும். வெடிக்காத போதும் அதிக புகையை வெளியேற்றிக் கொண்டே இருக்கிறது. இந்தப் புகை, வானத்தில் 2 மைல் உயரம் வரை தெரியும்.

4 /9

மியான்மரின் ராம்ரி தீவு 'முதலைகளின் தீவு' என்றும் அழைக்கப்படுகிறது. ஆபத்தான முதலைகள் நிறைந்த பல உப்பு நீர் ஏரிகள் இங்கு உள்ளன. இந்தத் தீவில் வாழும் ஆபத்தான முதலைகள் பெரும்பாலான மக்களுக்கு தீங்கு விளைவித்துள்ளன என்பதால் இந்த தீவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது..

5 /9

ஜப்பானில் அமைந்துள்ள மியாகேஜிமா இசு தீவில் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாது. வளிமண்டலத்தில் உள்ள நச்சு வாயுக்களின் அளவு இயல்பை விட மிக அதிகமான அளவை எட்டியிருப்பதால், இந்த தீவில் உயிர்வாழ வேண்டுமானால், எப்போதும் ஆக்சிஜர் மாஸ்க்  அணிய வேண்டும்.

6 /9

பிரேசிலில் உள்ள ஒரு தீவில் பல பாம்புகள் வாழ்கின்றன, யாரும் இங்கு செல்ல முடியாது அல்லது அங்கு சென்றவர்கள் உயிருடன் திரும்பி வர முடியாது. இங்கு பாம்புகள் ஆட்சி செய்கின்றன. இந்த தீவு பாம்பு தீவு என்று அழைக்கப்படுகிறது. உலகின் மிக ஆபத்தான பாம்புகளும் இந்த தீவில் காணப்படுகின்றன.

7 /9

தப்பிக்க கடினமாக இருக்கும் இதுபோன்ற ஒரு சதுப்பு நிலமும் உலகில்  உள்ளது. ஓக்ஃபெனோக்கி என்று பெயரிடப்பட்ட இந்த சதுப்பு நிலம் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பான்ஸ் என்ற பச்சை புல் எங்கும் பரவி உள்ளது. இங்கு முன்பு மக்கள் கட்டிய வீடுகள், சாலைகளும் இந்தப் புற்களால் மூடப்பட்டுள்ளன. இது ஒரு கொலைகாரப் புல். இங்கு விஷ கொசுக்கள், பூச்சிகள், விஷப்பாம்புகள், தவளைகள் மற்றும் ஆயிரக்கணக்கான முதலைகள் வாழ்கின்றன.

8 /9

ஜப்பானில் ஒரு மர்ம காடு உள்ளது (Suicide Forest in Japan). இந்தக் காட்டின் பெயர் 'அகிகஹாரா தற்கொலைக் காடு'. இங்கு வருபவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் இந்த காடு 'தற்கொலை காடு' என அழைக்கப்படுகிறது. டோக்கியோவிலிருந்து இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான பயண தூரத்தில் உள்ள இந்த மர்ம வனம், பேய் காடு என்றும் அழைக்கப்படுகிறது.

9 /9

அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவு 'சேபிள் தீவு' என்று அழைக்கப்படுகிறது. 42 கிமீ நீளமும், 1.5 கிமீ அகலமும் கொண்ட இந்த தீவு 'மணல் தீவு' என்றும் 'நதியின் கல்லறை' என்றும் அழைக்கப்படுகிறது. 300 க்கும் மேற்பட்ட கப்பல்கள் இங்கு விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளன, ஏனென்றால் தூரத்திலிருந்து இந்த தீவு கடல் நீர் போல் தெரிகிறது, இதன் காரணமாக பெரும்பாலான கப்பல்கள் இங்கு விபத்துக்குள்ளாகின்றன.