உஷார்: பொது இடத்தில் மறந்தும் ஒருபோதும் இந்த 8 செயல்களைச் செய்யாதீர்கள்!

பொதுமக்கள் பெரும்பாலானோர் பொதுவெளியில் என்ன பேச வேண்டும் மற்றும் என்ன பேசக்கூடாது என்று தெரியாமல் பேசுகின்றனர். இது ஒரு நேரத்தில் தீங்கு விளைவிக்கவில்லை என்றாலும், துரதிருஷ்டவசமாக வேறு நேரத்தில் அது உங்களைத் தீங்கு விளைவிக்கலாம். மேலும் நீங்கள் குறிப்பிட்ட இந்த செயல்கள் மற்றும் விஷயங்கள் பொதியிடத்தில் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 

ஒரு பொது இடத்தில் தனிப்பட்ட உடல்நலப் பிரச்சினைகள், மதம் மற்றும் அரசியல் போன்றவற்றை பொதுஇடங்களில் பேசவோ அல்லது அருகில் இருப்பவர்களிடம் கூறக்கூடாது. அதன்பின்னர் உங்களைப் பற்றிய அல்லது மற்றவர்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள், ரகசியங்கள், வதந்திகள் அல்லது மற்றவர்களைப் புண்படுத்தும் செயல்களைச் செய்யக்கூடாது. இது உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் அசௌகரியம் அல்லது தேவையற்ற மோதலை ஏற்படுத்த நேரிடலாம். 

1 /8

உடல் பிரச்சனை மற்றும் நோய்கள்:அனைவருக்கும் உடலி ஏதேனும் பிரச்சனைகள் இருந்துகொண்டிருக்கும். அந்தவகையில் தன்னுடைய சொந்த உடல் நிலைப் பிரச்சனைகளைப் பொதுவெளியில் மற்றும் கூட்டமாக இருக்கும் இடத்தில் சத்தமிட்டுப் பேசவோ அல்லது சொல்லக்கூடாது.

2 /8

வருமானம் மற்றும் சொந்த பிரச்சனைகள்: பொதியிடத்தில் தெரியாத நபர்களிடம் சொந்த பிரச்சனைகளைப் பகிர்ந்து பேசக்கூடாது. வருமானம் மற்றும் பணம் குறித்த எந்தவொரு பேச்சும் பொதுவெளியில் பேசக்கூடாது.  

3 /8

உணவு மற்றும் உடற்பயிற்சி:உணவு மற்றும் உடற்பயிற்சி இவை இரண்டும் பொதுமக்கள் பொதுவெளியில் பேசக்கூடாது. நீங்கள் சாப்பிடும் உணவுகள் மற்றவர்களின் உணவுப் பழக்கத்தைப் பாதிக்கலாம் . 

4 /8

சண்டைபோடுதல்:பொதுமக்கள் பொதுவெளியில் சண்டை போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது அருகில் இருக்கும் பொதுமக்களின் மன உலைச்சலைப் பெரிதும் பாதிக்கும்.

5 /8

இருமல் அல்லது துப்புதல்: இருமல் அல்லது வாயை மூடாமல் தும்மினால் காற்றில்  தொற்று நோய்கள் பொது மக்களுக்குப் பரவும்.

6 /8

உரத்த தொலைப்பேசி அழைப்புகள்: மக்கள் பொது இடங்களில் உங்கள் தொலைப்பேசியில் சத்தமாகப் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் தொலைப்பேசியில் சத்தமாகப் பேசினால் அருகில் இருக்கும் நபர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதைக் கவனத்தில் வேண்டும். 

7 /8

சிறுநீர் கழித்தல்: பொது இடங்களில் மக்கள் வெளியில் செல்லும் ரோட்டோரங்களில் சிறுநீர் கழிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் இது மிகப்பெரிய தொற்றுநோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்துவதாகத் தகவல் கூறப்படுகிறது.  

8 /8

குப்பை கொட்டுவது: அதிகமான குப்பை கொட்டுகின்றனர் இது நோய் பரவுமா? அபாயத்தை ஏற்படுத்துகிறது எச்சைத் துப்புதல் இது போன்ற செயல்கள் மேற்கொள்வதால் பொதுமக்களுக்குப் பலவிதமான வியாதிகள் நோய்கள் தொற்றுகள் ஏற்படுகிறது எனவே இது போன்ற தவறுகளைச் செய்யாதீர்கள்.