தேவர்களின் குருவான குரு பகவான் அறிவு, கல்வி, குழந்தைகள், ஆன்மீக ஈடுபாடு மற்றும் அதிர்ஷ்டத்தின் காரணியாக கருதப்படுகிறார். குரு பகவான், 2025 பிப்ரவரி 4ம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார்.
கடந்த அக்டோபர் 9ம் தேதி ரிஷபத்தில் வக்ரமடைந்த குரு பகவான், இப்போது பிப்ரவரி மாதம் வக்ர நிவர்த்தி அடைவது, மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், மேஷம் உட்பட 4 ராசிக்காரர்கள் மிக வும் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்.
குரு வக்ர நிவர்த்தி: குரு பகவான், 2025 பிப்ரவரி 4ம் தேதி அன்று மதியம் 1:46 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு வக்ர நிவர்த்திக்கு பிறகு வரும் மே 14 புதன்கிழமை இரவு 11:20 மணிக்கு குரு பெயர்ச்சி மிதுன ராசியில் நடைபெறுகிறது.
குரு பெயர்ச்சி 2025: மே மாத குரு பெயர்ச்சிக்கு பிறகு, மிதுன ராசியில் சுமார் 6 மாதங்கள் சஞ்சரித்து அக்டோபர் 18ம் தேதி அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு நுழைகிறார். 2025 குரு பெயர்ச்சி மற்றும் குரு வக்ர நிவர்த்தி ஆகியவை காரணமாக. மேஷம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் துவங்கி வேலையில், தொழில், வியாபாரத்தில் பெரும் வெற்றி பெறுவார்கள்.
மேஷம்: குரு வக்ர நிவர்த்தி, மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் ஏற்படும். பொருளாதார நிலை மேம்படும். திடீர் பண ஆதாயம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். ஒட்டுமொத்த பொருளாதார நிலையும் நன்றாக இருக்கும். மகிழ்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான காலம் வரும். குடும்ப வாழ்க்கையும் மேம்படும், இது மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரும்.
கன்னி: குரு வக்ர நிவர்த்தி, கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் சாதகமாக இருக்கும். பிப்ரவரி 2025 இல் ஏற்படும் இந்த மாற்றம் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தி அடைவார்கள், முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். திடீர் பண ஆதாயமும் கூடும்.
விருச்சிகம்: குரு வக்ர நிவர்த்தி, விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல சுப பலன்களைத் தரும். தொழில், வியாபாரம் இரண்டிலும் பலன் தரும். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் வேலையிலும் வெற்றியைத் தரும். வேலையில் உள்ள தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள், மூத்தவர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள். தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். நிறைய பண வரவு கிடைத்து, வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
மகரம்: குரு வக்ர நிவர்த்தி, மகர ராசிக்காரர்களுக்கு மாற்றத்திற்கான நேரமாக இருக்கும். எனவே உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை வரவேற்க தயாராக இருங்கள். உங்களுக்கு பதவி உயர்வு மீண்டும் பரிசீலிக்கப்படும். உங்கள் பணி பாராட்டப்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். முழு உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து பணியாற்றுங்கள். இது, உங்களுக்கு பல வாய்ப்புகளைத் தரும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.