Mutual Funds, SIP Investment: மியூச்சுவல் ஃபண்டில் SIP மூலம் ரூ. 7 கோடி வரை வருவாய் ஈட்டவது எப்படி, எவ்வளவு தொகையை எவ்வளவு ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
SIP உங்களுக்கு சேமிப்பு பழக்கத்தை கொண்டுவரும். நீங்கள் சம்பாதிக்கத் தொடங்கும்போதே SIP பழக்கத்தையும் தொடங்குங்கள். இதனால் வாழ்க்கை சிறக்கும்.
பொறுப்பு துறப்பு: SIP மூலம் வருடந்தோறும் 12% வருவாய் வரும் என்பதில் எவ்வித நிச்சயமும் கிடையாது. சந்தை நிலவரத்தை பொறுத்து இதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். மேலும், இது உங்களின் தகவல் அளிப்பதற்காக மட்டுமே எழுதப்படுகிறது. இது பரிந்துரை அல்ல என்பதை வாசகர்கள் மனதில் வைக்க வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
SIP என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் உங்களுக்கு ஏற்ற நிலையான தொகையை தொடர்ந்து முதலீடு செய்வதற்கான வழிமுறையாகும். SIP மூலம் நீங்கள் தினமுமோ, வாரந்தோறுமோ, மாதாந்தோறுமோ அல்லது வருடந்தோறுமோ முதலீடு செய்யலாம்.
இருப்பினும், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்றால் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும். நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் மட்டும் கூட்டு வட்டி கிடைக்கும். கூட்டு வட்டியால் உங்கள் முதலீட்டின் வருவாயும் அதிகரிக்கும்.
அதேபோல், நீங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் SIP தொகையை நீங்கள் அதிகரிக்க வேண்டும். நீங்கள் ரூ.1000 முதலீடு செய்தால் 10 சதவீத வட்டி கிடைக்கும். இதனால் ஓராண்டில் ரூ.1,100 கிடைக்கும். அடுத்து, SIP தொகையை ரூ.2000 ஆக உயர்த்த வேண்டும். மேலும், வட்டிக்கு வட்டி வருவதுதான் கூட்டு வட்டி எனப்படும்.
நீங்கள் SIP மூலம் நீண்ட கால முதலீட்டில் ரூ.7 கோடியை கூட ஈட்டலாம். அதாவது, ரூ.11 ஆயிரம், ரூ.13 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மாதாமாதம் முதலீடு செய்தவதால் எத்தனை ஆண்டுகளில் ரூ.7 கோடியை நீங்கள் பெற முடியும் என்பதை இங்கு விரிவாக காணலாம். இங்கு வருடாந்திர வருவாய் 12% ஆக கணிக்கிடப்பட்டுள்ளது.
ரூ.11 ஆயிரம்: நீங்கள் 35 ஆண்டுகளுக்கு மாதாமாதம் SIP மூலம் ரூ.11 ஆயிரம் முதலீடு செய்வதன் மூலம் ரூ.46 லட்சத்து 20 ஆயிரம் முதலீடு செய்யப்பட்டிருக்கும். மேலும், இதன் வட்டி வருவாய் மட்டும் ரூ.6 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 960 கிடைக்கும். இதன்மூலம், 35 ஆண்டுகளுக்கு பின் மொத்தமாக 7 கோடியே 14 லட்சத்து 47 ஆயிரத்து 960 ரூபாயை பெறலாம்.
ரூ.13 ஆயிரம்: நீங்கள் 34 ஆண்டுகளுக்கு மாதாமாதம் SIP மூலம் ரூ.13 ஆயிரம் முதலீடு செய்வதன் மூலம் ரூ.53 லட்சத்து 4 ஆயிரம் முதலீடு செய்யப்பட்டிருக்கும். மேலும், இதன் வட்டி வருவாய் மட்டும் ரூ.6 கோடியே 94 லட்சத்து 83 ஆயிரத்து 100 கிடைக்கும். இதன்மூலம், 34 ஆண்டுகளுக்கு பின் மொத்தமாக 7 கோடியே 47 லட்சத்து 87 ஆயிரத்து 100 ரூபாயை பெறலாம்.
ரூ.15 ஆயிரம்: நீங்கள் 33 ஆண்டுகளுக்கு மாதாமாதம் SIP மூலம் ரூ.15 ஆயிரம் முதலீடு செய்வதன் மூலம் ரூ.59 லட்சத்து 40 ஆயிரம் முதலீடு செய்யப்பட்டிருக்கும். மேலும், இதன் வட்டி வருவாய் மட்டும் ரூ.7 கோடியே 4 லட்சத்து 69 ஆயிரத்து 791 கிடைக்கும். இதன்மூலம், 33 ஆண்டுகளுக்கு பின் மொத்தமாக 7 கோடியே 64 லட்சத்து 9 ஆயிரத்து 971 ரூபாயை பெறலாம்.