October 2024 Grah Gochar : அக்டோபரில் தீபாவளி பண்டிகை வருகிறது. பணத்தேவை அனைவருக்கும் அதிகரிக்கும் என்றாலும், எல்லோருக்கும் நினைத்ததெல்லாம் கிடைத்துவிடுமா என்றால் ஜோசியம் தான் பார்க்க வேண்டும்...
Grah Gochar: 3 ராசிக்காரர்களுக்கு தீபாவளி மாதமான அக்டோபரில் அடைமழையாய் பணம் கொட்டும்! காரணம், புதன், செவ்வாய், சூரியன், சுக்கிரன் என 4 கிரகங்கள் ராசிகளை மாற்றுகின்றன...
அக்டோபர் மாதத்தில் நவராத்திரி, ஆயுதபூஜை, விஜயதசமி தொடங்கி தீபாவளி கந்தசஷ்டி என பல பண்டிகைகள் வரப் போகின்றன. அதேபோல, நான்கு பெரிய கிரகங்கள் ராசியை மாற்றுவதால் 4 ராசிக்காரர்களுக்கு அருமையான காலம் வரப்போகிறது...
10 அக்டோபர் 2024: புத்தி, அறிவு, ஞானம் மற்றும் நட்பின் கிரகமான புதன் தனது ராசியை அக்டோபர் 10 அன்று மாற்றுகிறார். இந்த மாற்றம் பலருக்கும் நல்ல பலன்களைக் கொடுக்கும்
13 அக்டோபர் 2024: ஆடம்பரம், செல்வம், சொத்து, புகழ் மற்றும் அன்பு ஆகியவற்றின் கிரகமான சுக்கிரன், அக்டோபர் 13 அன்று ராசியை மாற்றி விருச்சிக ராசிக்குள் நுழைவார்
20 அக்டோபர் 2024: கிரகங்களின் தளபதியான செவ்வாய் கடக ராசிக்குள் நுழைகிறார்.
17 அக்டோபர் 2024: கிரகங்களின் ராஜாவான சூரியன் தனது ராசியை மாற்றி, அக்டோபர் 17ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்குள் நுழைகிறார்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். காதலருடனான கருத்து வேறுபாடுகள் காதலாக மாறும். பரஸ்பர உறவுகள் மேம்படும். நிலுவையில் உள்ளவேலைகள் முடிவடையும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்க இது தான் சிறந்த காலம்
கன்னி ராசியினருக்கு அக்டோபர் மாதம் சிறப்பாக இருக்கும். வருமானம் மட்டுமல்ல, செலவுகளும் அதிகரிக்கும் ஆனால் விரும்பியதை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் உற்சாகம் இருக்கும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
சிம்ம ராசிக்கு சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் சிறப்பு ஆசிகள் இருக்கப் போகின்றன. தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அக்டோபரில் கிரகப் பெயர்ச்சியால் நன்மை உண்டாகும். தொழிலில் முன்னேற்றமும் சமூகத்தில் மரியாதையும் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பொருளாதார நிலை படிப்படியாக மேம்படும்.
தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது