பண்டிகை காலத்தில் அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) ஒரு பம்பர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அனைத்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்தியில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வாய்ப்பை அரசு நிறுவனமான BSNL-ம் விட்டுவிடவில்லை.
புதிய திட்டத்தில், பயனர்களுக்கு இரண்டு மாதங்கள் இலவச சேவை வழங்கப்படுகிறது. இந்த புதிய திட்டம் என்ன என்பதை இங்கே காணலாம்.
BSNL-ன் இந்த திட்டம் பல வகைகளில் வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும். தீபாவளி நேரத்தில் வந்துள்ள இந்த சிறப்பு திட்டத்தில்வாடிக்கையாளர்களுக்கு பல கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
BSNL வாடிக்கையாளர்களுக்கு புதிய 1999 ரூபாய் பம்பர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் பல விதங்களில் வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும். 1999 ரூபாய்க்கான இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
BSNL-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, 1999 ரூபாய் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 365 க்கு பதிலாக 425 நாட்கள் செல்லுபடியைப் பெறுகின்றனர். அதாவது இவை இன்னும் இரண்டு மாதங்கள் செல்லுபடியாகும். வாடிக்கையாளர்கள் இரண்டு மாதங்களில் கூடுதல் கட்டணம் இல்லாமல் இலவச அழைப்பு மற்றும் இணைய வசதியை அனுபவிக்க முடியும்.
BSNL-ன் இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜிபி இணைய தரவு மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும். பயனர்கள் வேகத்திற்கு கூடுதல் பணம் செலுத்த தேவையில்லை.
ரூ. 1999 திட்டத்தில் BSNL வாடிக்கையாளர்களுக்கு EROS Now-ன் இலவச சந்தாவை வழங்குகிறது. அதாவது, ஈரோஸின் இந்த மேடையில் திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் தொடர்களையும் வாடிக்கையாளர்கள் பார்த்து ரசிக்க முடியும். இருப்பினும், இந்த சந்தா இரண்டு மாதங்களுக்கு மட்டுமே என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.