Post office-ன் இந்த சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் கோடீஸ்வரராவது உறுதி

தபால் நிலைய திட்டங்கள் எப்போதும் முதலீட்டிற்கான சிறந்த வழிகளாக இருந்திருக்கின்றன. நீங்கள் எந்த அஞ்சல் அலுவலக திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்தாலும், அதன் பிறகு உங்கள் பணத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இருப்பதில்லை. 

தபால் நிலையத்தில் பல சேமிப்புத் திட்டங்கள் (Saving Plans) உள்ளன. அவற்றில் நீங்கள் முதலீடு செய்தால், சில ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரராக முடியும். உங்களை கோடீஸ்வரராக்கும் சில தபால் அலுவலக திட்டங்களைப் பற்றி இப்போது காணலாம். 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரையிலான திட்டங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

ALSO READ | MONEY DOUBLE SCHEME: இந்த திட்டத்தில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கவும்!

1 /5

உங்களை கோடீஸ்வரராக்கும் தபால் அலுவலகத்தின் 4 திட்டங்கள் - இந்த பட்டியலில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தொடர்ச்சியான வைப்பு (RD), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) மற்றும் நேர வைப்பு (TD) திட்டம் ஆகியவை உள்ளன. இந்த திட்டங்கள் மூலம், முதலீட்டாளர்கள் சில ஆண்டுகளிலேயே ஒரு பெரிய தொகையைப் பெற முடியும்.

2 /5

PPF-ல், முதலீட்டாளர் ஆண்டுக்கு அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யலாம். ஒரு மாதத்தில் நீங்கள் அதிகபட்சமாக ரூ .12,500 டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தின் மெச்யூரிட்டி காலம் 15 ஆண்டுகள் ஆகும். இதை நீங்கள் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். இப்போது, இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதம் கிடைக்கிறது. நீங்கள் 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், உங்கள் மொத்த முதலீடு ரூ .37,50,000 ஆக இருக்கும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு, மெச்யூரிடியின் தொகை 1.03 கோடி ரூபாயாக இருக்கும். ஏனெனில் இதில் உங்களுக்கு கூட்டு வட்டிக்கான லாபமும் கிடைக்கும்.

3 /5

RD-ல் நீங்கள் மாதா மாதம் அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். இதற்கு எந்த வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. இங்கே நாம் ஒவ்வொரு மாதமும் PPF-க்கு சமமாக 12500 ரூபாய் டெபாசிட் செய்தால், ஒரு பெரிய தொகையை நீங்கள் பெறலாம். RD-யில் நீங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதில் ஆண்டுதோறும் 5.8 சதவிகித கூட்டு வட்டி கிடைக்கிறது. நீங்கள் அதிகபட்ச வருடாந்திர வைப்புத்தொகையை போட்டால்: 1,50,000 ரூபாய் போட்டால், காம்பௌண்டிங் வட்டிக்கு ஏற்ப 27 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் தொகை சுமார் 99 லட்சம் ரூபாயாக இருக்கும். அதில் உங்கள் மொத்த முதலீடு 40,50,000 லட்சம் ரூபாயாக இருக்கும்.

4 /5

நீங்கள் NSC-ல் முதலீடு செய்தால், வருமான வரியின் 80 சி பிரிவின் கீழ் NSC-ல் ஆண்டுக்கு ரூ .1.5 லட்சம் வரை முதலீடு செய்து வரி விலக்கு பெறலாம். இதில் மெச்யூரிட்டி காலம் ஐந்து ஆண்டுகளாகும். இதில் ஆண்டுக்கு 6.8 சதவீதம் என்ற விகிதத்தில் வட்டி கிடைக்கிறது. வட்டி வீதத்தைப் பற்றி பேசுகையில், மற்ற சிறு சேமிப்பு திட்டங்களில், வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. ஆனால் NSC-ல் முதலீடு செய்யும் நேரத்தில் இருக்கும் வட்டி விகிதம் மெச்யூரிட்டி காலம் முழுதும் தொடரும் 

5 /5

நேர வைப்புத்தொகையில் டெபாசிட் செய்வதற்கான அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. தபால் அலுவலக நேர வைப்புத்தொகையின் கீழ், 5 ஆண்டு வைப்புகளில் ஆண்டுதோறும் 6.7 சதவீத வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் நீங்கள் டெபாசிட் செய்யும்போது: 15 லட்சம் செய்தால், வட்டி விகிதம்-6.7% ஆண்டுதோறும் கிடைக்கும். இவ்வகையில் நீங்கள் 30 ஆண்டுகளில் கோடீஸ்வரராகலாம்.