Pongal 2024 Movies: பொங்கலன்று ஒளிபரப்பாகும் புதுப்படங்கள்! எந்த சேனலில் எதை பார்க்கலாம்?

Pongal 2024 New Movies Telecasting On Television: பொங்கலன்று பல புது படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன. எந்த சேனலில் எந்த படத்தை பார்க்கலாம்? 

1 /8

பொங்கலன்று, புதிய படங்கள் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகின்றன. அப்படி ஒளிபரப்பாகும் புது படங்களை எந்த சேனலில் எந்த நேரத்தில் பார்க்கலாம்? இங்கு பார்ப்போம். 

2 /8

சரத்குமார், அமிதாஷ் நடிப்பில் வெளியான பரம்பொருள் திரைப்படம் விஜய் தொலைகாட்சியில் ஜனவரி 15ஆம் தேதியன்று மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

3 /8

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்த படம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படம் ஜனவரி 16ஆம் தேதியன்று மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

4 /8

விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம், சன் தொலைக்காட்சியில் ஜனவரி 16ஆம் தேதியன்று மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

5 /8

அருள் நிதி இயக்கத்தில் வெளியான படம், கழுவேத்தி மூர்க்கன். இந்த படத்தில் துஷாரா விஜயன்,சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம், கலைஞர் தொலைக்காட்சியில் ஜனவரி 15ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

6 /8

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் படம், வரும் 16ஆம் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

7 /8

விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம், 15ஆம் தேதியன்று மதியம் 12:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. 

8 /8

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று மாலை 3:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.