Proposal Day 2024: காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி, அதற்கு முன்னதாக ப்ரப்போசல் தினம் இன்று (பிப்ரவரி 8) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் உங்கள் க்ரஷ்ஷிற்கு எப்படி ப்ரபோஸ் செய்யப்போகிறீர்கள்?
Valentine's Day Celebration Proposal Day 2024: பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இன்று அதற்கு முன்னதாக ப்ரபோசல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் அனைவரும் தங்களின் அன்புக்குரியவரை சந்தித்து அவர்களிடம் பலர் தங்களது காதலை தெரிவிக்க இருக்கின்றனர். தமிழ் சினிமா ஹீரோக்கள் பலர், ஹீரோயின்களுக்கு அழகாக டைலாக் கூறி, காதலை தெரிவிப்பர். அதே போல நீங்களும் உங்கள் க்ரச்ஷிடம் காதலை தெரிவித்து ஜமாய்க்கலாம்! அதற்கான ஐடியாக்கள் இதோ!
காதலர் தினத்தை முன்னிட்டு, இன்று ப்ரபோசல் டே கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உங்கள் கிரஷ்ஷிற்கு எந்தெந்த வகையில் ப்ரபோஸ் செய்யலாம் என்பதை பார்ப்போம் வாங்க.
மனதில் இருப்பதை எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் பட்டென ‘அலைபாயுதே’ கார்த்திக் போல கூறிவிடுவது புத்திசாலித்தனம். அதற்காக ஓடும் ரயிலுடன் ஓடிப்போயெல்லாம் ப்ரப்போஸ் செய்ய வேண்டாம். ஒரு இடத்தில் நீங்கள் காதலை தெரிவிக்க விரும்பும் நபரை அழைத்து, ‘எனக்கு உங்கள் மீது இது போன்ற விருப்பம் உள்ளது’ என்பதை மட்டும் தெரிவியுங்கள்.
நீங்கள் ஏற்கனவே ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருப்பவராக இருந்தால், அவருக்கு திருமணத்திற்கு சம்மதமா என ப்ரப்போஸ் செய்ய நினைத்தால், அதற்காக இந்த நாளை உபயோகப்படுத்தி கொள்ளலாம். முட்டி போட்டு, கையில் ரோஸ் அல்லது மோதிரத்துடன் இந்த ப்ரபோசலை செய்யலாம்.
இசை, காதலை வெளிப்படுத்துவதற்கான சக்தி வாய்ந்த கருவி என பலரால் நம்பப்படுகிறது. எனவே, உங்கள் க்ரஷ் அல்லது காதலிக்கு பிடித்த பாடலை கற்றுக்கொண்டு முடிந்தால் பாடிக்காமியுங்கள். இந்த பாடலே உங்கள் காதலை நன்றாக வெளிப்படுத்த உதவும்.
சிறந்த முறையில் காதலை வெளிப்படுத்துவது என்பது, உங்களுக்கு பிடித்தவருக்கான பிடித்த விஷயங்களை செய்வதையும் குறிக்கும். எனவே, அவருக்கு பிடித்த இடத்திற்கு அழைத்து சென்று அங்கு உங்களது காதலை தெரிவிக்கலாம்.
உங்கள் மனதில் ஆங்காங்கே சிதறி கிடக்கும் காதல் குமுறல்களை ஒரு கடிதமாக எழுதி, உங்கள் க்ரஷ்ஷின் கையில் கொடுக்கலாம். காதல், ஒரு மனிதனை கவிதை கிறுக்கனாக மாற்றும் என பெரியவர்கள் சும்மா சொல்லவில்லை. அதற்கென்று கவிதை எழுதி தரவேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் மனதில் உள்ள காதலை மட்டும் எழுதி கொடுத்தால் போதுமானது. ஓகே ஆனால் காதலி கிடைப்பார், இல்லை என்றால் நல்ல காதல் கதை கிடைக்கும்.
சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் இவை இரண்டுமே பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இயற்கையை நாம் ரசிக்கும் போது, உள்ளூர நமக்கு நல்ல உணர்வு ஏற்படும். உங்கள் அன்புக்குரியவரை சூரிய உதயம் ஆகும் அல்லது சூரியன் அஸ்தமனமாகும் சமயத்தில் நல்ல இடத்திற்கு அழைத்து சென்று, அவரிடம் உங்கள் மனதில் உள்ளதை கூறலாம்.