2024இல் பட்ஜெட் விலையில் கலக்கிய இந்திய 5 ஸ்மார்ட்போன்கள்! - கம்மி விலையில் ஜம்முனு இருக்கும்!

Best 5 Budget Smartphones In 2024: 2024ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களுக்கு டிசைனிலும், அம்சங்களிலும் எவ்வித சமரசமும் இன்றி குறைந்த விலையில் விற்பனையான தரமான 5 ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம்.

சாம்சங் முதல் CMF வரை இந்தாண்டு பல்வேறு ஸ்மார்ட்போன்கள் இந்த 2024ஆம் ஆண்டில் ஹிட் அடித்துள்ளன. அதில் இந்த 5 ஸ்மார்ட்போன்கள் (5 Budget Smartphones) பட்ஜெட் பிரிவில் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது எனலாம்.

1 /8

தரமான டிசைன்கள், நிறைவான அம்சங்கள், அதுவும் குறைவான விலையில் என இந்தாண்டு இந்திய சந்தையில் பல ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் செலுத்தின.   

2 /8

சாம்சங் தொடங்கிய லேட்டஸ்ட் டிரெண்டில் உள்ள CMF வரை பல்வேறு ஸ்மார்ட்போன்களை இதில் குறிப்பிடலாம். அந்த வகையில், இந்த 2024ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் ஹிட் அடித்த டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம்.   

3 /8

ஒவ்வொருவருக்கும் ஒரு பட்ஜெட் இருக்கும் என்றாலும், ஒரே வகையான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை ஒப்பீடு அதில் எது பட்ஜெட் விலையில் வழங்கப்படுகிறது என்பதை கணக்கிட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.   

4 /8

Lava Blaze Duo: இரண்டு டிஸ்பிளேவுடன் வெறும் ரூ.18,999 என்ற விலையில் வந்த இந்த மாடல் நிச்சயம் கவனிக்கத்தக்க பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும்.

5 /8

CMF Phone 1: தனித்துவமான டிசைனில் வரும் ஸ்மார்ட்போன் 50MP பின்பக்க இரு கேமரா அமைப்பும், 16MP முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது. இதில் 5000mAh பேட்டரி உள்ளது. இதன் விலை ரூ.14,999 ஆகும்.

6 /8

Samsung Galaxy M15 5G Prime Edition: இதன் டிசைன் கவர்ச்சிக்கரமாக இல்லாவிட்டாலும் 5 வருட OS உத்தரவாதத்துடனும் 6,000mAh பேட்டரியும் AMOLED டிஸ்பிளே மற்றும் மூன்று கேமரா அமைப்பு என இத்தனை அம்சங்களுடன் வந்த இந்த மாடல் வெறும் ரூ.11,999 தான்.

7 /8

HMD Fusion: இதுவும் வித்தியாசமான டிசைனில் பின்பக்கம் 108 MP+ 2 MP இரண்டு கேமரா அமைப்பு உடனும், 50MP பின்பக்க கேமரா அமைப்பு உடனும் வருகிறது. இதன் விலை ரூ.17,999 ஆகும். இந்த அம்சங்கள் இவ்வளவு குறைவான விலையில் தரமாக கிடைப்பது அரிதாகும்.   

8 /8

Redmi 4A: வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் நல்ல அம்சங்களை கொடுத்த ஸ்மார்ட்போன் இது எனலாம். வெறும் 8,499 ரூபாயில் 5ஜி ஸ்மார்ட்போனாக இது வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.