தமிழகம் முழுக்க பரவலான மழை! இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

கோடைகாலத்தில் சில உணவுகளை தவிர்ப்பது போல், மழைக்காலத்திலும் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். இதனால் நோய்வாய்ப்படும் அபாயத்தை குறைக்கலாம்.

1 /7

இந்தியா முழுக்க வெயில் வாட்டிவதைத்த நிலையில் தற்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் பல இடங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

2 /7

இந்த சமயத்தில் நாம் சாப்பிடும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் நோய்கள் எளிதில் தாக்க அதிக வாய்ப்புள்ளது.

3 /7

பால், தயிர் மற்றும் பன்னீர் போன்ற பால் பொருட்கள் ஈரப்பதமான நேரங்களில் எளிதில் கெட்டுவிடும். எனவே இந்த உணவுகளை சாப்பிடும் முன்பு கவனத்துடன் இருக்க வேண்டும்.

4 /7

மழை பெய்யும் நேரத்தில் கடல் உணவுகள் எளிதில் மாசுபடலாம். எனவே இந்த காலத்தில் மீன், இறால் மற்றும் பிற கடல் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

5 /7

பழக்கடைகளில் பழங்கள் வாங்கும் போது கவனமுடன் வாங்க வேண்டும். சில சமயங்களில் பழங்கள் அழுகி போக வாய்ப்புள்ளது. மேலும் சரியாக சுத்தப்படுத்தாமல் இருந்தால் நோய்கள் வரலாம்.

6 /7

மழைக்காலத்தில் தெரு ஒரே உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பானி பூரி, சமோசா போன்ற சாட் உணவுகள் மூலம் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது.

7 /7

கீரை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளில் அதிக ஈரப்பதம் இருக்கும். எனவே இதனை மழை காலங்களில் சாப்பிட வேண்டாம். செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.