ராஜீவ் காந்தி நினைவு நாள், இந்தியாவின் இளைய பிரதமருக்கு புகைப்பட அஞ்சலி

இந்தியாவின் இளைய பிரதமர் ராஜீவ் காந்தி, தனது 40வது வயதில் அமரர் ஆனார்.

1991 மே 21ம் நாளன்று, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில், தமிழீழ விடுதலைப் புலிகளால் (LLTE) கொல்லப்பட்டார். பதவியில் இருந்தபோது உயிரை இழந்த இரண்டாவது இந்தியப் பிரதமரான ராஜீவ்காந்தியின் தாயாரான இந்திரா காந்தியும் படுகொலை செய்யப்பட்டார்.  

(Photograph:Twitter)

1 /5

தேசத்திற்கு ராஜீவ் ஆற்றிய சேவைகளுக்காக மிகவும் மதிப்புமிக்க மற்றும் உயரிய சிவிலியன் விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

2 /5

இலங்கையில் ஆயுதமேந்திய தமிழ் பிரிவினைவாதக் குழுவான விடுதலைப் புலிகளால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்

3 /5

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பேரணியில் கலந்து கொள்ள சென்றிருந்த ராஜீவ்காந்தி, தற்கொலைப் படையினரால் கொல்லப்பட்டார் 

4 /5

ராஜீவ் கொலையில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் எட்டு முக்கிய பேரில் தனுவும் ஒருவர். மின்ஹாஸ் மெர்ச்சன்ட்டின் காந்தியின் வாழ்க்கை வரலாறு, 'ராஜீவ் காந்தி, ஒரு கனவின் முடிவு' புத்தகத்தின்படி, குழுவின் மற்ற உறுப்பினர்கள் முருகன், அறிவு, சுபா மற்றும் மூன்று உள்ளூர்வாசிகளான நளினி, பத்மா மற்றும் பாக்யநாத் இந்த கொலையில் ஈடுபட்டனர். விசாரணையில் நளினி மட்டும் உயிருடன் இருப்பது தெரியவந்தது. சில வாரங்களுக்குப் பிறகு,19 வயதுடைய பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். வெடிகுண்டிற்காக பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 31 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு, இந்திய உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது

5 /5

ராஜீவ் காந்தியின் நினைவு நாளான 2022, மே 21ம் நாளன்று டெல்லியில் உள்ள வீரபூமியில் அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினர். ராஜீவின் குடும்பத்தினரின் அஞ்சலி இது