ஜனவரி 1 முதல் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: RBI அறிவிப்பு

Card Tokenisation Rules: இந்திய ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, துரித செயல்பாடு, மேம்பாடு ஆகியவற்றுக்காக தனது செயல்முறையில் அவ்வப்போது பல மாற்றங்களை செய்கிறது. ஜனவரி 1, 2022 முதல், கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் முறை மாறவுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தரவு சேமிப்பு தொடர்பான டோக்கனைசேஷனுக்கான விதிகளை வெளியிட்டுள்ளது. இது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும். இதில், கார்ட் வைத்திருப்பவரின் தரவின் தனியுரிமை குறித்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1 /4

ஜனவரி 1 முதல், வாடிக்கையாளர் தனது கார்ட் விவரங்களை எந்த மூன்றாம் தரப்பு செயலியுடனும் (Third Party App) பகிர வேண்டியதில்லை. உதாரணமாக, சோமாடோ போன்ற உணவு விநியோக செயலிகளுடனோ அல்லது ஓலா, ஊபர் போன்ற கேப் சேவைகளுடனோ வாடிக்கையாளர்கள் இனி தங்கள் கார்ட் விவரங்களை பகிர வேண்டிய தேவை இருக்காது.

2 /4

தற்போது உள்ள செயல்முறையின் படி, இந்த செயலிகளில் வாடிக்கையாளர்களின் கார்டின் முழுமையான விவரங்கள் சேமிக்கப்படுகின்றன. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மோசடிகளுக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது. ஆனால் டோக்கனைசேஷன் அமைப்பு அத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. இந்த சேவையை எடுக்கலாமா வேண்டாமா என்பது வாடிக்கையாளர்களின் விருப்பத்தைப் பொறுத்ததாக இருக்கும். இதை எடுத்துக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படாது. வங்கிகள்/கார்டு வழங்கும் நிறுவனங்களும் இந்த செயல்முறையை கட்டாயமாக்காது.

3 /4

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, ஜனவரி 1, 2022 முதல், கார்ட் வழங்கும் வங்கி அல்லது கார்ட் நெட்வொர்க் தவிர வேறு எந்த அமைப்பும் கார்டின் தரவுகளை சேமிக்க முடியாது. இவற்றில் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளும் நீக்கப்படும்.

4 /4

கார்ட் நெட்வொர்க்குகள் விதிகளைப் பின்பற்றுவதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும். CoFT மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப், ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றின் மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கும் இந்த விதி பொருந்தும். டோக்கன் சேவை வழங்குநர் வழங்கும் கார்டுகளுக்கு மட்டுமே டோக்கனைசேஷன் வசதி வழங்கப்படும். கார்ட் தரவை டோக்கனைஸ் மற்றும் டி-டோக்கனைஸ் செய்யும் வசதி அதே டோக்கன் சேவை வழங்குநரிடம் இருக்கும். வாடிக்கையாளரின் ஒப்புதலுடன் கார்ட் தரவின் டோக்கனைசேஷன் செய்யப்படும்.