புதுடெல்லி: இந்த ஆண்டு குடியரசு தின விழா கொண்டாட்டங்களில், வலிமைமிக்க போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன. இந்திய விமானப்படையின் வலிமையை வெளிப்படுத்திய இந்த அணிவகுப்பில் முதன்முறையாக 75 விமானங்கள் பங்கேற்றன.
இந்திய விமானப்படையின் வளமான கலாச்சாரத்தையும், ஆயுதப் படைகளின் வலிமையையும் காட்டியது இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டங்கள்...
சுகோய் மற்றும் ரஃபேல் போர் விமானங்கள் ஒன்றாக பறப்பதை வானில் உள்ள கேமராக்கள் படம் பிடித்தன. இந்த முதன்மையான போர் விமானங்கள் ஒன்றாக பறப்பதைக் காணும்போது, எதிரிகளுக்கு அச்சம் ஏற்படும்
டன் கணக்கில் பொருட்களை போர்க்களங்களுக்கு கொண்டு செல்லும் திறன் கொண்ட விமானங்கள்
'வலிமையால் வானத்தைத் தொடவும்' என்பது இந்திய விமானப்படையின் தாரகமந்திரம்
குடியரசு தின அணிவகுப்பின் முடிவில் இந்திய விமானப்படையின் ரஃபேல், சுகோய், மிக் போன்ற போர் விமானங்கள் போர் விமானங்கள் விண்ணில் பறந்தன.
நாட்டின் முதல் பெண் ரஃபேல் போர் விமான பைலட் ஷிவாங்கி சிங்
புது டெல்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனுக்கு மேல் ஜெட் விமானங்கள் பறக்கும் காட்சி. (Image: ANI)