REVEALED: 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததற்கான காரணம் இதுவே!

டைனோசர்களின் தலைவிதியைப் பற்றி பெரும்பான்மையான விஞ்ஞானிகள் பகிர்ந்து கொண்ட நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஆராய்ச்சியின் விவரங்கள் இங்கே.

ஏறக்குறைய 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த அனைத்து டைனோசர்கள் மற்றும் 70 சதவிகித உயிரினங்களின் அழிவுக்கு காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சிறுகோள் ஒன்றின் தாக்கமே பூமியின் பெருமளவிலான உயிரினங்களைக் கொன்றதாக பெரும்பாலான விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு நகரத்தின் அளவிலான விண்வெளி பாறை விழுந்ததன் தாக்கத்தால் இந்த பேரழிவு ஏற்பட்டதாக டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதற்கான 'இறுதி ஆதாரத்தை' கண்டுபிடித்ததாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
டைனோசர்களின் தலைவிதியைப் பற்றி பெரும்பான்மையான விஞ்ஞானிகள் பகிர்ந்து கொண்ட நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஆராய்ச்சியின் விவரங்கள் இங்கே.

Also Read | Niagara Falls:  நயாகரா நீர்வீழ்ச்சி, வெண்பனி பனிவீழ்ச்சியாக மாறிய அதிசயம்! 

1 /5

மெக்ஸிகோ வளைகுடாவில் உள்ள சிக்ஸுலப் (Chicxulub) பள்ளத்தின் கீழ் கடலுக்கு அடியில் இருந்து 900 மீட்டர் பாறையின் படிம மாதிரிகளை ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதற்குள் சிறுகோளின் தூசி இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தனர். டைனோசர்கள் ஒரு மாபெரும் விண்வெளி பாறையால் அழிக்கப்பட்டதற்கான இறுதி ஆதாரம் இது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

2 /5

பாறை மாதிரியின் வேதியியல் கலவையில் 'இரிடியம்' அதிக அளவில் இருப்பதாக தெரியவந்தது. பூமியின் மேலோட்டத்தில் அரிதாகவே காணப்படுகிறது இரிடியம் என்பது குறிப்பிடத்தக்கது.

3 /5

மெக்ஸிகோவில் உள்ள யுகடான் தீபகற்பத்தின் (Yucatán Peninsula in Mexico) அடியில் 150 கி.மீ விட்டம் கொண்ட பள்ளத்திலிருந்து மாதிரிகளை சேகரிக்கும் பணியில் சர்வதேச குழு ஈடுபட்டது. 2016 இல் மாதிரிகள் சேகரிக்கும் பணி தொடங்கியது  

4 /5

சராசரியை விட 30 மடங்கு அதிகமாக இருக்கும் இரிடியத்தின் அளவுகள் 'கிரெட்டேசியஸ் / மூன்றாம் நிலை (கே.டி) எல்லையில் கண்டறியப்பட்டுள்ளன, சிறுகோள் தாக்கிய பிறகு, படிந்த தூசி    அடுக்குகள் மிகவும் தடிமனாக இருந்தன, இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு தான் தூசியைத் துல்லியமாகத் தேட முடிந்தது.

5 /5

ஏறக்குறைய 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த அனைத்து டைனோசர்கள் மற்றும் 70 சதவிகித உயிரினங்களின் அழிவுக்கு காரணமான சிறுகோள் 11 கி.மீ அகலத்தில் இருந்தது. பூமியின் மீது மோதிய பிறகு எஞ்சியது   தூசி மட்டுமே.